புதன், 23 மார்ச், 2011

கருவில் சிதைந்த 6 மாத குழந்தையின் சடலம் யாழில் மீட்பு!

இராஜசிங்கம் வீதி திருநகர் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து குழந்தை ஒன்றின் சடலத்தை யாழ் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

கருவில் 6 மாதம் இருந்து சிதைக்கப்பட்ட குழந்தையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பிரதேச வாசிகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக