பாடசாலை மாணவர்களின் வருகை மற்றும் ஒழுக்கம் போன்ற விடயங்களில் ஆசிரி யர்கள் உரிய கவனம் எடுக் காமையே இத்தகைய நிலை மைக்குக் காரணம் என்று பல ரும் குற்றம் சாட்டுகின்றார்கள்.
இதற்கு ஏற்ப கடந்தவாரம் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தெல்லிப்பழை கல்விக் கோட்டப் பாடசாலையின் மாணவர்கள் சிலர் குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்டவர்கள் வாடகைக்கு வான் ஒன்றில் காரைநகர் கசூரினா கடற்கரைக்குச் சென்று நல்ல மதுபோதையில் திரும்பி உள்ளனர். அவர்கள் நடக்க முடியாத நிலையில் தள்ளாடியபடி சுன்னாகம் ஐயனார் கோயில் வீதியில் காணப்பட்டனர். இவர்களைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.பெற்றோர்களும் பிள்ளைகளிடம் கொடுக்கும் பணம் உரிய தேவைக்குப் பயன்படு கின்றதா என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியமாகும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக