சனி, 7 மே, 2011

புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் கோடி இறங்கிய பின்பே குழந்தையை தூக்கலாம் -ஆலய நிர்வாகத்தின் அசமந்தபோக்கால் நிகழ்ந்த பரிதாபம்

கடந்த 3 ஆம் திகதி அன்று புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலய தீர்த்தக்கேணியில் 10 வயதுடைய ஞாநேந்திரன் எழிலரசன் என்ற சிறுவன் தவறி விழுந்து உயிர் இளந்துள்ளான் .இவ் பரிதாபகரமான மரணத்திற்கு ஆலய நிர்வாகத்தினரின் அசமந்தப்போக்கே காரணமென
புளியங்கூடல் மக்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் பறறி மேலும் தெரியவருவதாவது,



குறித்த தினம் அன்று காலை ஆலய தீர்த்தொட்சவம் இடம்பெற்று பிற்பகல் கொடியிறக்க வைபவம் இடமபெற்றுகொண்டிருந்தபோது குறித்த தீர்த்தக்கேணி அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவரான 10 வயதுடைய ஞாநேந்திரன் எழிலரசன் என்பவர்
பாதுகாப்பான தடுப்பு சுவர்கள் அறற ஆலய தீர்த்தக்கேணியில் தவறி
விழுந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக அப்பகுதியில் நின்ற சிலரால்
ஆலயத்திற்குள் நின்ற நிர்வாக சபையினரிடம் தெரிவிக்கப்பட்டு சிறுவனை உடனடியாக காப்பாற்ற உதவி கோரப்பட்டது. அப்போது கொடியிறக்க வைபவம் இடமபெற்றுகொண்டிருந்த
படியால் ஆலய நிர்வாக சபையின் முக்கிய உறுப்பினர் ஒருவரால் ``கொடியிறக்கிய பின்பே குழந்தையை தூக்கலாம்`` என தெரிவிக்கப்பட்டது.இதனால் காப்பற்ற யாரும் இன்றி நீரில்
தத்தளித்த குறித்த சிறுவன் நேரில் முழ்கி பரிதாபகரமாக உயிர் இளந்துள்ளான்.

இது சம்பந்தமாக ஆலய நிவாக சபையிடம் தட்டிக்கேட்க முற்பட்ட இளையர்கள் சிலரால் அச்சுறுத்தப்பட்டதுடன்,இச் செய்தியை தனது இணையத்தளம் ஒன்றில் பிரசுரித்த அப்பகுதி இளம் உடகவியலாளர் ஒருவரும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்.

எனவே குறித்த இணைய பக்கத்தில் இருந்து அவரின் பாதுகாப்பு கருதி அச் செய்தியை நீக்கி உள்ளார்.

கடந்தகால போரினால் தந்தையை பிரிந்து நிர்க்கதியான ஒரு குடும்பம் இன்று தனது பிள்ளைகளில் ஒன்றை இழந்து பரிதவிக்கிறது.

``தனது பிள்ளை கேணியில் விழுந்திருந்தால் குறித்த ஆலய நிர்வாக சபை உறுப்பினர் கோடி இறக்கிய பின்னா வந்து பிள்ளையை தூக்கி இருப்பார் ? ``என் அப்பகுதி இளையர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

குறித்த சிறுவன் கேணியில் வீழ்ந்தது தெரிந்திருந்தும், காப்பற்ற கூடிய
சந்தர்ப்பம் இருந்தும் காப்பற்றமல் கொடி இறக்குவதிலேயே குறியாய் இருந்த கோவில் நிர்வாகத்தினர் கடந்த கால போரினால் தந்தை பற்றி தெரியாத நிலையில் தனது பிள்ளைகளை காப்பற்ற கொண்டுவந்து இன்று அநியாயமாக பறிகொடுத்திருக்கும் தாயின் புலம்பலுக்கு
என்ன பதில் சொல்ல போகிறார்கள்.....????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக