
கவிதா வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை காணவில்லை. கரூர் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே கவிதா இறந்து விட்டதாக கூறினார்.
வெள்ளியணை போலீசார் விசாரித்தனர். கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறிக்க வந்தபோது கொள்ளையனை எதிர்த்து போராடியதால் கவிதாவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கொள்ளையன் தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே கவிதாவுக்கும், வெஞ்சமாங்கூடலூரை சேர்ந்த ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு காரணமாக 6 மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்றதும் தெரியவந்தது. இதனடிப்படையிலும் விசாரணை நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக