
இத்திட்டத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த போதிலும் இணையத்தின் ஊடாக விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ஒத்திவைத்திருந்தது. எனினும் இத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக சிறிலங்கா குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்கு மேலாக தங்கியிருக்கும் ஆட்களை கிரமமான முறையில் அரசாங்கம் கண்டுபிடிப்பதே இதன் நோக்கமாகும். வருகை தரவிருப்பவர்களில் உல்லாசப்பயணிகள் 50 அமெரிக்க டொலரும் வர்த்தகர்கள் 60 டொலரும் ஏனைய பயணிகள் 25 டொலரும் திரும்பப் பெறாத கட்டணமாக செலுத்த வேண்டும்.
உல்லாசப்பயணிகளுக்கு இரு போக்குவரத்துடன் கூடிய 30 நாள் விசாவும், வர்த்தக பயணிகளுக்கு பல தடை வந்து செல்லக்கூடிய விசாவும் தங்கிச் செல்லும் பயணிகளுக்கு ஸ்ரீலங்காவில் ஏழு நாட்கள் தங்கிச் செல்லக்கூடிய விசாவும் வழங்கப்படும்.
பயணிகள் வந்திறங்கியவுடன் விசா வழங்கும் நடைமுறையைக் கொண்டுள்ள சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மாத்திரம் இந்த நடைமுறையிலிருந்து விதிவிலக்களிக்கப்படுவர்.
சிங்கப்பூர் இந்தியா தவிர்ந்த ஏனைய நாட்டு பிரஜைகள் விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் 30 நாள் விசா பெறும் நடைமுறையை கொண்டுள்ளது. சிங்கப்பூருக்கு செல்லும் இந்திய பிரஜைகள் மட்டும் முன் கூட்டியே விசா பெற வேண்டும்.
இதேவேளை இந்திய பிரசைகளுக்கு மலேசியா, ஹொங்கொங் , தாய்லந்து உட்பட 33 நாடுகளில் வந்திறங்கியவுடன் விசா வழங்கப்படுகி;ன்றது.
2010 ஆம் ஆண்டில் 120,000 க்கு அதிகமான இந்தியர்கள் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக