புதன், 23 மார்ச், 2011

பெற்ற தாயே தன்குழந்தைக்கு பாலில் விசம் கலந்து கொடுத்த கொடூரம்!



தனது குழந்தைக்கு நஞ்சு கலந்த பாலை ஊட்டிய தாயாரையும் அக்குழந்தையின் தந்தையையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.சிலாபம் இங்கிரிய பகுதியில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை சிலாபம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது
30 வயதான இப்பெண் திருமணமாகாமல் குழந்தையை அண்மையில் பிரசவித்திருந்தார் எனவும் பின்னர் அவமானம் தாங்காமல் குழந்தைக்கு பாலில் நஞ்சைக்கலந்து கொடுத்ததாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து இப்பெண்ணின் காதலனும் குழந்தைக்கு தந்தையுமான இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தை சிலாபம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக