
இதில் யாழ்.மாவட்ட செயலகத்தின் தற்போதைய அரச அதிபர் இமெல்டா சுகுமார்,யாழ். மாநகர சபையின் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் ஆகிய மூவரும், தத்தம் அமைப்புகளின் முதல் பெண்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை, யாழ்.மாவட்ட செயலகத்தின் மேலதிக அரச அதிபர் தொடக்கம் பிரதேச செய லகங்கள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற வற்றிலும் பெண்களின் தலைமைத்துவம் செல் வாக்குச் செலுத்துவதை பார்க்க முடிகின்றது. ஒரு காலத்தில் யாழ்ப்பாண நிர்வாகப் பணிகளில் பெண்களின் வகிபங்கு மிகமிகக் குறை வாக இருந்தது உண்டு.ஆனால் இப்போது அந்நிலை மாற்றமடைந்து முக்கிய பதவிகளை பெண்கள் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்நிலைமை கண்டு தமிழ் இனம் பெருமையடைய வேண்டும். தமிழ்ப் பெண்களின் கல்வியறிவு, உயர்கல்வி, முகாமைத்துவத்திறன் என்பவற்றின் தகுதிப் பாடுகள் எமது தமிழ்ச் சமூகத்தின் எழுச்சிக்கும் உயர்ச்சிக்கும் வித்திடுவனவாக அமையும் என்பது உறுதி. அதேசமயம் முதன்மையான அமைப்புகளின் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகிக்கும் பெண் உயரதிகாரிகள் பொதுசனத் தொடர்பாடல் மற்றும் பணியாளர்களுடனான அணுகுமுறை என்பவற் றில் சுமுகமானதும் அணுகக்கூடியதுமான உறவுநிலையைப் பேணுவது கட்டாயமானதாகும்.
பொதுசன உறவு என்பது மிகவும் முக்கியமானதாகும்.அந்த வகையில் இதனை உயர்பெறு மானமுடையதாக ஆக்கும்போது பெண் தலைமைத்துவம் என்பது உன்னதமாக மதிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக