
சண்முகசுந்தரம் கந்தாஸ்கரன் (வயது40) என்பவரையே கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அனைத்துலக காவல்துறையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரே 2009ம் ஆண்டில் ‘ஓசன் லேடி‘ என்ற கப்பலில் 76 தமிழ் அகதிகளை கனடாவுக்கு அனுப்பி வைத்திருந்தார் என்றும் நசனல் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
சங்கர் என்று அழைக்கப்படும் இவர் சிறிலங்காவில் பிறந்தவர்.
பிரித்தானிய கடவுச்சீட்டை வைத்துள்ள இவர், பிரித்தானியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து செயற்பட்டவர்.
விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவில் இணைந்திருந்த இவர் சண்டை ஒன்றில் கால் ஒன்றை இழந்த பின்னர் பிரித்தானியாவுக்குச் சென்றார்.
அங்கிருந்து இவர் ஆயுதக்கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
‘பிரின்சஸ் ஈஸ்வரி‘ என்ற கப்பலில் இவர் வடகொரியாவில் இருந்து சிறிலங்காவுக்கு ஆயுதங்களை கடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 மே மாதம் இந்தக் கப்பல் சிறிலங்காவுக்கு ஆயுதங்களைக் கடத்திக் கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணமானதை இந்தக் கப்பலின் பணியாளர்கள் அறிந்தனர்.
இதையடுத்து கப்பலில் இருந்த ஆயுதங்களை அவர்கள் இந்தோனேசியாவுக்கு அப்பாலுள்ள கடலில் கொட்டி விட்டனர்.
அதன்பின்னர் கந்தாஸ்கரன் கனடாவுக்கு அகதிகளை ஏற்றி அனுப்பும் ஆட்கடத்தலில் ஈடுபடத் தொடங்கினார்.
கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட ‘பிரின்சஸ் ஈஸ்வரி‘ என்ற கப்பலின் பெயரை ‘ஓசன் லேடி‘ என்று மாற்றிய பின்னர் இந்தியாவில் இருந்து அது புறப்பட்டது.
மலேசியாவில் நிறுத்தப்பட்ட அந்தக் கப்பல் பின்னர் 76 அகதிகளுடன் பிரிட்டிஸ் கொலம்பியா கரையை வந்தடைந்தது.
அதன் பின்னர் 10 மாதங்கள் கழிந்து 492 அகதிகளுடன் ‘சன் சீ‘ கப்பல் கனடாவுக்கு வந்தது“ என்றும் நசனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக