திங்கள், 28 மார்ச், 2011

சிங்கள மயமாகும் தமிழர் பிரதேசங்கள்-படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன!


தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலில் வெளிப்படையாக மேற்கொண்ட சிறீலங்கா அரசு, தற்போது போர் நிறைவடைந்து 23 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் பிரதேசங்களில் என்ன நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது என்பது தொடர்பில் தென்னிலங்கை ஊடகவியலாளர் (லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர்) ஒருவர் வடக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் தகவல்களை இங்கு தருகின்றோம்.


சிறீலங்காவில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலுக்கு முன்னர் ஏ-32 பாதை வழியாக மன்னார் சென்று பின்னர் யாழ்ப்பாணம் சென்று மீண்டும் ஏ-9 நெடுஞ்சாலை வழியாக கொழும்பு திரும்பியிருந்தேன்.

முதலில் நான் ஏ-32 பாதை வழியாக சென்றபோது, முதல் ஒரு கி.மீ தூரத்திற்குள் சிறீலங்கா இராணுவத்தின் மூன்று முகாம்களை கண்டேன். அவை சோதனைச்சாவடிகள் அல்ல, பிரதான முகாம்களாகவே உள்ளன. எனவே ஒரு கி.மீற்றருக்கு மூன்று முகாம்கள் என்றால் பொதுமக்களின் எவ்வளவு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

அந்த நிலத்திற்கு சொந்தமான மக்கள் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை. மன்னாரில் இருந்து பூநகரி வரையிலான கடற்கரைப் பகுதியை படையினரின் கட்டுப்பாட்டுக்குள் எந்த நேரமும் வைத்திருக்கவே சிறீலங்கா அரசு விரும்புகின்றது. போரின் போது இந்த பகுதியை விடுதலைப்புலிகளே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் தற்போது அங்கிருந்த பொதுமக்களும் விரட்டப்பட்டுள்ளனர்.

எனினும் அந்த பிரதேசத்தில் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஐந்து மைல் நீளமான மரமுந்திரிகை தோட்டங்களை சிறீலங்கா இராணுவம் கைப்பற்றி பயன்படுத்தி வருகின்றது. அதனை அவர்கள் சிறீலங்காவின் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடமோ அல்லது அந்த நிலங்களுக்கு உரியவர்களிடமே கையளிக்க முற்படவில்லை.

இராணுவத்தினரை கொண்டு மரமுந்திரிகை செய்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுவருகின்றது. சிறீலங்கா இராணுவத்தில் �மரமுந்திரிகை றெஜிமென்ட்� என்பது ஒன்று உள்ளதா என எனக்கு தெரியவில்லை. ஆனால் பொதுமக்களின் (தமிழ் மக்களின்) பயிர்நிலங்களை சிறீலங்கா இராணுவம் பலவந்தமாக கைப்பற்றி வைத்திருக்கின்றது.

ஏ-32 பாதையில் உள்ள நெல்வயல்கள் அனைத்தும் அறுவடை செய்யப்பட்டும், அறுவடை செய்யப்படும் நிலையிலும் உள்ளன. ஆனால் அவை முழுமையாக செய்யப்படவில்லை. உழவு இயந்திரங்களின் பற்றாக்குறையே அதற்கான காரணம். அதுமட்டுமல்லாது, அந்த பகுதிகளில் உள்ள நெல் ஆலைகளும் தென்னிலங்கை சிங்கள சமூகத்தை சேர்ந்த குழுக்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.

அவர்கள் தான் அங்குள்ள நெல் வயல்களின் அறுவடைகளை மேற்பார்வை செய்து வருகின்றனர். எமது பேரூந்தில் சிறீலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் துடைப்பங்களுடன் ஏறினார். அவருடன் பேச நான் முற்பட்டேன். நான் பெண் என்பதால் அவர் பேசுவதற்கு தயங்கவில்லை.

உங்களின் தபால் மூல வாக்குகளை அனுப்பிவிட்டீர்களா என கேட்டபோது, சலித்துக்கொண்ட படைச்சிப்பாய், முட்டாள்கள், எம்மை எமது தலைவர் திறந்த சிறைச்சாலையில் வைத்துள்ளபோது, யார் வக்களிக்காதது தொடர்பில் கவலைப்படுவார்கள் என தெரிவித்தார்.

வாக்களிக்குமாறு இராணுவத்தினரை சிறீலங்கா அரசு கேட்கவில்லை எனவும் தெரிவித்தார். அந்த கருத்து என்னை அதிர்ச்சியில் ஆழத்தியது. சீருடையில் இருந்தாலும், அவர் திறந்த மனதுடன் பேசியிருந்தார். சரத் பொன்சேகாவுக்கு நடைபெற்ற சம்பவங்கள் தெரிந்திருந்தாலும், நான் யார் என தெரியமுற்படாது அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

யாழ் நகரத்தை நான் சென்றடைந்தபோது, அங்கு சந்தைகளில் பொருட்கள் இருக்கவில்லை. எல்லாம் வெறிச்சோடியிருந்தன. சிவப்பு வெங்காயமே அங்கு மலிவானது. கிலோ 100 ரூபாய்கள். டைச்சுக் கோட்டையை அரசு புனரமைத்துக் கொண்டிருந்தது.

ஆனால் அதில் பணியாற்றிய பணியாளர்களும் தென்னிலங்கையில் இருந்தே கொண்டுவரப்பட்டிருந்தனர். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் ஒருவர் கூட வடக்கை சேர்ந்தவர் அல்ல.

ஏனைய கட்டுமானத்தொழில்களையும் தென்னிலங்கை தொழிலாளர்களே மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் வடபகுதி தமிழ் மக்கள் தொழில்வாய்ப்புக்கள் இன்றி அவதிப்படுகின்றனர். தென்னிலங்கை மக்கள் தொழில் மேற்கொண்டு பணம் சம்பாதிப்பதை அவர்கள் வேதனையுடன் பார்க்கின்றனர்.

நான் ஏ-9 பாதையால் திரும்பியிருந்தேன். இரணைமடுவில் உள்ள பேரூந்து தரிப்பிடத்தில் கடைகள் வைத்திருந்த தமிழர்கள் துரத்தப்பட்டுள்ளனர். சிங்கள வர்த்தகர்களே அங்கு கடைகளை திறந்துள்ளனர். முன்னர் வியாபாரங்களை மேற்கொண்ட தமிழ் வர்த்தகர்கள், வியாபாரம் குறைந்த கிராமங்களில் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி நகரத்தில் �மொறட்டுவ மர ஆலை� என்ற கடை காணப்படுகின்றது. அங்கு பணியாற்றுபவர்கள் எல்லோரும் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர்கள். கிளிநொச்சியை சேர்ந்த எவரும் இல்லை. தென்னிலங்கை சிங்களவர் ஒருவரின் �கித்சிறீ புகையிலை� கடை ஒன்றும் அங்கு உள்ளது. அங்கு �கண்ணிவெடி பேஸ்ரி கடை� மற்றும் தென்னிலங்கை சிங்களவர் ஒருவரின் �டி சில்வா கடை� என்பனவும் அங்குள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக