யாழ்.அரியாலையில் பாழடைந்த வீட்டில் ஆணின் சடலம் மீட்பு
யாழ். அரியாலைப் பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து ஆண் ஓருவரின் சடலத்தை யாழ்.பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவரது சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்தப் பொலிஸார், சுமார் 40 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட பருத்த உடலமைப்பைக் கொண்டவர் என தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டு இச்சடலம் பாழடைந்த வீட்டில் போடப்பட்டு இருக்கலாம் என யாழ். பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் பொலிஸார் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக