யாழ். யுவதியொருத்தியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த மூன்று இராணுவத்தினருக்கு இன்று கொழும்பு நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு எதிராக கடத்தல், வல்லுறவு, படுகொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமாஅதிபர் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
யுவதியைப் படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதித்த நீதவான், கடத்தல் மற்றும் வல்லுறவுக்குற்றச்சாட்டுகளுக்கு புறம்பான சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் குற்றவாளிகளுக்கு மேன்முறையீட்டுக்கான சந்தர்ப்பமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக