செவ்வாய், 29 மார்ச், 2011

யாழ் கோண்டாவிலில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டவர் உயிரிழந்தார்: குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் பொலிஸார்



யாழ். கோண்டாவில் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று உயிரிழந்தார்.
கொழும்பைச் சோ்நத சபாரத்தினம் ராஜேந்திரன் என்பவரே அவ்வாறு பரிதாப மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளதாக யாழ்.போதனா மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
அவர் யாழ். கோண்டாவில் கிழக்கு, கோட்டைக்காட்டு ஒழுங்கையிலுள்ள தனது உறவினர் வீடொன்றில் தங்கியிருந்த போது கடந்த சனிக்கிழமை கொள்ளைக் கும்பலொன்றினால் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை அவரது உறவினர் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர் கும்பல் அங்கிருந்த ராஜேந்திரனைப் பலமாகத்தாக்கி விட்டு அவர் வசம் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்தது.
பொலிஸார் இந்தக் கொள்ளை, கொலை தொடர்பில் விசாரணைகளைத் தொடர்நத வண்ணம் இருந்தாலும் அவர்களால் இன்னும் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக