வியாழன், 31 மார்ச், 2011

கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் ஆணின் சடலம்!

யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள காணி ஒன்றில் இருந்து ஆணின்  சடலம்  ஒன்று பல வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் தகவலை இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் இன்று இரவு சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

சடலம் அடையாளம் காணப்பட்ட பின்னர்  நாளை பிரேத  பரிசோதனையும் மரண விசாரணையும் நடைபெறும் என யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக