செவ்வாய், 29 மார்ச், 2011

பிரான்ஸில் இன்று நடந்த கோர விபத்து!


இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 09h15 Francilienne இலுள்ள N104 தேசிய சாலையின் உள்பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் Combs-la-Ville (Seine-et-Marne) பகுதியில் கோர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது. மூன்று பார ஊர்திகளும் (poids lourds) ஐந்து சிற்றுந்துகளும் (Voitures) விபத்துக்குள்ளாயின.
இதில் மூவர் விப
த்து இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். ஐவர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் உடனடியாக உலங்குவானூர்தியில் பரிஸிலுள்ள வைத்தியசாலை ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். நெடுஞ்சாலையின் வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

கிடைத்த தகவல்களின் படி செக் நாட்டு வாகன இலக்கமுடைய பார ஊர்தியொன்று மிக வேகமாக வந்துள்ளது. நெடுஞ்சாலையில் ஏற்பட்டிருந்த வாகன நெரிசலைக் (bouchon) கண்டும் வேகம் தளர்த்தாமல் வந்ததால் முன்னே நின்ற பல வாகனங்கள் மீதும் பார ஊர்திகள் மீதும் மோதியுள்ளார். செய்தி தரவேற்றம் செய்யப்படும் வரை நெடுஞ்சாலையின் விபத்து நிகழ்ந்த பகுதி வாகனப் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக