கனடாவின் ஆளும்கட்சியான கொண்சவேட்டிவ் கட்சி தற்போதைய தேர்தலில் தயாரித்துள்ள ஒரு விளம்பரம் கனடாத் தமிழர்களிடைய பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கனடாவிற்கு அகதிகளாக வருகை தந்த கப்பல்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரம் மேற்படி கட்சி இப்படியான அகதிகளைக் கொண்டுவரும் குற்றச்செயல்களிற்காக சீ-49 என்ற சட்டத்தை தயாரிக்க முற்பட்டதாகவும் அதனை எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டன என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த விளம்பரத்தில் தமிழ் அகதிகள் வருகை தந்த கப்பல்களின் படங்கள் உபயோகிக்கப்பட்டிருப்பதுடன் இன்னொரு கப்பல் வருவதற்குத் தயாராக உள்ளது என்று இந்த வருட முற்பகுதியில் வந்த ஒரு செய்தியையும் குறிப்பாகப் போட்டுள்ளது.
பல்லின சமூகத்தைச் சார்ந்தவர்களின் வாக்குக்களை கவர்வதற்காக சீனர்கள், இந்தியர்கள் குறிப்பாக சீக்கியர்களுடன் நல்லுறவைப் பேணுவது போன்ற விளம்பரங்களை வெளியிட்டுள்ள மேற்படி கட்சி வெள்ளையின, இனத்துவேச வாக்குக்களை கவர்வதற்காக ஈழத்தமிழர்களை பலிக்கடாவிக்கியுள்ளதாகவே கருதப்படுகிறது.
சர்ச்சைக்குரிய விளம்பரம்:
இந்த மாத முற்பகுதியில் அமைச்சர் ஒருவரால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட ஆவணம் ஒன்று எதிர்க்கட்சிகளால் வெயிடப்பட்டிருந்தது.
எந்தத் தொகுதிகளில் கண்சவேட்டிவ் கட்சி வெற்றியை எதிர்பார்க்கிறது என்றும் எந்த இனங்களை அது குறிவைக்கிறது என்ற விபரமும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சீனர்கள், இந்தியர்கள் ஆகியோரையே கொண்சவேட்டிவ் கட்சி குறிவைத்துள்ளது என்ற விபரமும் தமிழர்களின் வாக்குகளை கொண்சவேட்டிவ் கட்சி எதிர்பார்க்கவில்லையென்பதையும் அந்த ஆவணம் மூலம் தெரியவந்தது. அதேபோலவே தற்போது தமிழர்களை இழிவான பிரச்சாரமொன்று அக் கட்சி பாவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக