உறவின் ஆதரவில் அல்லைப்பிட்டியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்
மக்களுக்கு முதல் கட்டமாக முதலாம் வட்டாரத்தில் வாழும் 15 குடும்பங்களுக்குதலா ஆயிரம் ரூபா வீதம் 13/09/2010 திங்கள் அன்று வாகீசர் சனசமுக நிலய மண்டபத்தில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சனசமுக நிர்வாக சபையும்தெரிவுசெய்யப்பட்ட குடும்பத்தினரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இன்நிகழ்வில் தேனீர் விருந்தும் இடம்பெற்றது.மேலும் கீழே 23 படங்கள் இணைக்கப்பட்டுளளன! |
அல்லையூர்.கோம்க்கு வாழ்த்துக்கள் ,ஆயிரம்ருப உதவித்தொகை வளங்கபட்டநிகழ்வு படங்கள் பார்த்தேன், மிகவும் வரவேற்க்கதக்கது,எதிர்வரும்கலங்களில் நானும் உதவிசெய்கின்றேன். p.t.maran
பதிலளிநீக்குஎல்லோருக்கும் வணக்கம்!
பதிலளிநீக்குநீங்கள் அல்லைப்பிட்யிலுள்ள வறுமைக்கோட்டிற்குகீழ்பட்டு வாழும் மக்களுக்கு செய்த உதவிகளையும், அவர்களை படம்பிடித்து இணையதளத்தில் போட்டு உள்ளூர மகிழ்வதற்கும் எனது வாழ்த்துக்கள்! நாங்கள் உண்மையில் அந்த மக்களையும் மண்ணையும் நேசிப்பவர்களாக இருந்தால் அவர்கள் பிறர் உதவியின்றி வாழக்கூடிய உழைப்பாளிகளாக அவர்களை மாற்றுவதற்கு எமது திறமைகள் மற்றும் வளங்களை(சிறுஉதவி) பாவிப்பதே, நாம் அந்த மண்ணிற்குச்செய்யும் நன்றிக்கடனாகும்.
உதாரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் நாம் மாதம் அல்லது வருடம் ஒரு 10 டொலரோ or ஐரொவோ எமது ஊருக்காக முதலிட முன்வந்தோமானால் இதைவைத்து இந்தமக்களுக்கு சிறுதொழில்கள்( கோழிவளர்ப்பு, வீட்டுத்தோட்டம், நெசவு, நெற்செய்கை, ...)செய்ய கடனுதவிகள் செய்வோமானால் சில ஆண்டுகளிலேயே இவர்களை வறுமையிலிருந்து வெளிக்கொண்டுவரலாம். இப்படியான திட்டங்களை நானும் எனது நண்பர்களும் வன்னியுள்ள போர் விதவைகளிடம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். அந்த அனுபவத்தில்தான் இதை இங்கு எழுதுகிறேன்.