02.09.2010 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற அல்லைப்பிட்டி கரண்டப்பாய் முருகன் ஆலய அலங்காரத் திருவிழாவை மிகவும் திறம்படச் செய்துமுடித்த ஐயா அவர்களுக்கும், இவ் அலங்காரத் திருவிழாவைப் பொறுப்பேற்று முன்நின்று நடாத்திய அனைத்து
அன்பு உள்ளங்களுக்கும், அடுத்து அதற்கு முழுஒத்துழைப்பு நல்கிய அனைத்து அல்லை ஊர் மக்களுக்கும்,நிகழ்ச்சிகளைத் தந்து திருவிழாவைச் சிறப்பித்த கலைஞர்கள் அனைவருக்கும் இவ்விழாவைச் சிறப்பாக நடத்துவதற்கு மனம் உவந்து பணஉதவி வழங்கிய அல்லை ஊர் அன்பு இதயங்களுக்கும் அத்தோடு திருவிழாவின் நிகழ்வுகளை நிழற்படம் எடுத்து உலகமெல்லாம் பரந்து வாழும் அல்லைப்பிட்டி மக்களின் பார்வைக்கு வைத்த அல்லையூர் இணையத்திற்கும் எங்கள் இதயம் நிறைந்த அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
முக்கிய குறிப்பு:
கரண்டப்பாய் முருகன்ஆலயத்தின் புனர் அமைப்பு வேலைகள் இன்னும் முழுமையாக பூர்த்தி அடையவில்லை என்பதை அறியத்தருகின்றோம். குறிப்பாக மதில் வேலை பூர்த்தி அடையவில்லை. அடுத்து இவ்வாலயத்தைப் பொறுப்பேற்றுக் கட்டியவருக்கு இரண்டு இலட்சம் ரூபாய்கள் கொடுக்கு மதி இருப்பதால் ஆலய வேலை இடை நிறுத்தப் பட்டுள்;ளது என்பதை அறியத் தருவதோடு வெளிநாடுகளில்வசிக்கும் அல்லை ஊர் மக்களிடம் இவ்வாலயம் தனது வளர்ச்சிக்காக உதவி கோரி நிற்கிறது.
ஆலய நிர்வாகத்தினர்;
(அல்லை ஊர் கரண்டப்பாய்முருகன்ஆலயம்)
உங்கள் முயற்ச்சிகள் வெற்றியடைய எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகடவுளென்பது நம்பிக்கை, அதுவே கோவில் - அதனால் அது எல்லா பாமரனுக்கும் பொதுவானசொத்து - இந்த கருத்தியலின் அடிப்படையில், இந்த கோவிலைப்பற்றி கேள்விகேட்பதற்கு எல்லாக்குடிமகனுக்கும்(ஏன் நாய்களுக்கும், நரிகளுக்கும்) உரிமையிருக்கிறது, ஆகையினால் நீங்கள் எந்த உத்வேகத்துடன் இந்த முயற்ச்சியில் இறங்கினீர்கள், உங்கள் முயற்ச்சி 2003 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஏன் முளுமையடையமல் இருக்கிறது என்பதை கொஞ்சம் எல்லாக்குடிமகனுக்கும் விளக்குவீர்களா?
கேட்டது
செல்லத்துரை கலாமோகன்
பிற்குறிப்பு-
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை உங்கள் சொந்த பெயரிலும் உங்கள் மொழியாகிய "தமிழிலும்" எழுதுங்கள்- இல்லாவிடில் நடந்து முடிந்தவிவாதம் எதனால் நிறுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்தானே?
I think that there are a few people who can not write English.. toooooooo bad
பதிலளிநீக்குசெ.கலாமோகனவர்களூக்கு உங்கள் ஆதங்கத்தை என்னால் உனரமுடிகிரது
பதிலளிநீக்கு