சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று இளைஞர் மீது ஏறி நசுக்கியதில் படுகாயம் அடைந்த அவர், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்று உறவினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை மிருசுவில் வடக்கில் இடம்பெற்றது.இதே இடத்தைச் சேர்ந்த தியாகராசா தினேஸ் (வயது 18) என்னும் இளைஞரே பலியானார். வீட்டுக்கு வெளியே ஒழுங்கையில் இவர் படுத்திருந்த போது சம்பவம் இடம்பெற்றது என்று உறவினர்கள் கூறினர்.
இரவு நண்பர்களுடன் ஒழுங்கையில் இருந்து கதைத்து விட்டு அந்த இடத்திலேயே உறங்கி விட்டார் எனவும் நள்ளிரவு வேளையில் சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த வாகனம் இவர் மீது ஏறிச் சென்றிருக்கலாம் எனவும் இவரின் முனங்கள் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் இவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது. கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக