பருத்தித்துறையிலிருந்து நெல்லியடி ஊடாக யாழ்ப்பாணத்துக்கு 30 வருட கால இடைவெளிக்குப் பின்னர் கடுகதி இ.போ.ச.பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பருத்தித்துறை இ.போ.ச டிப்போ முகாமையாளர் கே.குலபாலசெல்வம் தெரிவித்தார்.
இந்தச் சேவைக்கென இரண்டு புதிய பஸ்களை லீசிங் அடிப்படையில் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாகவும் அவர் கூறினார். போதிய பஸ்கள் இல் லாமையால் பருத்தித்துறை நெல்லியடி யாழ்ப்பாணம் பிரதான பாதையில் திருப்தி கரமான முறையில் இ.போ. ச.பஸ் சேவைகள் நடை பெறாத நிலையில் ஆரம்பிக் கப்படும் கடுகதி பஸ் சேவை யால் அரச, தனியார்துறை உத்தியோகத்தர்கள், ஊழி யர்கள் மற்றும் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் 1970 களில் பருத் தித்துறைநெல்லியடியாழ்ப் பாணம் பிரதான பாதையில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை பருத்தித்துறையிலிருந் தும், யாழ்ப்பாணத்தி லிருந்தும் சமகாலத்தில் கடுகதி பஸ் சேவைகள் இடம்பெற்று வந்தன. நாட்டில் ஏற்பட்ட அசா தாரண சூழலால் இந்தச் சேவை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்தச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக