புதன், 12 அக்டோபர், 2011

யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக் கூடத்தில் தொற்றுநோய்த் தாக்கம்!


யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக் கூடத்தில்தொற்று நோய்தாக்கம் காணப்படுவதாகவும், கண் சத்திர சிகிச்கை கூடத்தின் ஊழியர்களின் அசண்டையீனம் காரணமாக சிகிச்சைக்கு வந்தவர்கள் பலர் நீண்ட நாட்களாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சையாக கடந்த 14ம் திகதி ஒரே நேரத்தில் 20ற்கும் மேற்பட்டவர்களுக்கு கற்ராக் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 
இவர்கள் அன்று மாலையே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட போதும் 3, 4 நாட்களுக்குப் பின்னர் இவர்களில் பெரும்பாலானவர்கள் கண்ணில் மேலதிக கோளாறு காரணமாக மீளவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது நோய் தொடர்பாக எதுவிதமான அறிவுறுத்தலும்
வழங்கப்படவில்லை எனவும் சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாவரை செலவு செய்தும் சிகிச்சை பலனின்றி இருப்பதுடன், சிகிச்சைக்குப் பின்னர் ஏற்பட்ட வாதைகளுக்கு கொழும்பு செல்லவேண்டியிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை தனியார் வைத்தியசாலைகளில் அதிக பணம் செலவாகும் என்பதனால் யாழ் போதனா வைத்தியசாலையை அணுகியபோதும் தமது பார்வையை இழக்க வேண்டிய சூழலுக்கு தாம்
தள்ளப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக