விபத்துப் பலமாகத் தொடருந்தையும் தாக்கியது. இதில் உடனடியாக இருவர் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயங்களுக்குட்பட்டு அபாய நிலையிலுள்ளனர். மேலும்15 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் பார ஊர்தியின் சாரதி எவ்விதக் காயங்களுமின்றித் தப்பியுள்ளார்
தொடருந்தில் விபத்தின் சமயம் 170 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர். காயத்துக்கு உள்ளானோரிதும் பலியாகியவர்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த 200 முதலுதவிப் படையினரும் (sapeurs pompiers) காவற்துறையினருமாக அந்த இடத்திலேயே வைத்து சிகிச்சையை ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 40 முதலுதவிச் சேவை வாகனங்கள் அங்கே சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இறுதிச் செய்திகளின் படி இரவு 8 மணி தாண்டியும் முதலுதவிப்படையினர் அங்கு கடமையிலுள்ளதாகத் தெரிகின்றது.
அந்தப் பாதையில் அனைத்துத் தொடருந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. Bretagne மாநில நகர உயரதிகாரியால் அப்பகுதில் சிவப்புத்திடடம் (Le plan rouge) அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு விபத்தில் பல உயிர்கள் காயப்பட்டோ இறந்தோ இருந்தால் அப் பிராந்தியத்தின் முழு வளங்களையும் அவ்விடத்தில் திரட்டுவதையே சிவப்புத் திட்டம் என அறிவிப்பார்கள். காயப்பட்டவர்களுக்கும் அவர்கள் குடும்பங்களிற்கும் அதிர்சியில் இருந்து மீள உதவும் வகையில் உளவியல் மையங்களும் அவசரமாக நிறுவப்பட்டுள்ளது.
ஒருவரது கவனக் குறைவு உயிர்களைப் பலி கொண்டதோடு பலரை உயிராபத்துக்கு உள்ளாக்கியுமுள்ளது. பிராந்தியப் போக்குவரத்து, பிரந்திய வளங்கள் அனைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளது. வீதி விதிகளும் வேகக் கட்டுப்பாடும் எம்மைக் காப்பாற்றிக் கொள்வதோடு மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக என்பதை மனதிற் கொள்ளவேண்டும்.
*** இரவிரவாகத் தொடர்ந்து காயத்திற்குள்ளானோர் முதலுதவியளிக்கப்ட்டு உலங்குவானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செசெல்லப்பட்டுகிறார்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக