வியாழன், 31 மார்ச், 2011

தெற்கு லண்டனில் துப்பாக்கி சூடு: 5வயது தமிழ்ச் சிறுமி உட்பட இருவர் காயம்!



தெற்கு லண்டன் பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான பலசரக்கு கடை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 வயது சிறுமியும் 35வயதுடைய கடைஉரிமையாளரும் காயமடைந்துள்ளனர்.
தெற்கு லண்டன் பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான பலசரக்கு கடை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 வயது சிறுமியும் 35வயதுடைய கடைஉரிமையாளரும் காயமடைந்துள்ளனர். இருவரும் படுகாயமடைந்துள்ள போதிலும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.நேற்று இரவு 9.15மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐந்து பேரைக்கொண்ட குழுவே இத்துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளதாக நேரில் கண்டசாட்சியான கிருபாகரன் நந்தீஸ்வரன் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

மூவர் கடைக்கு வெளியே நின்று துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் இருவர் கடைக்குள் சென்று கடை உரிமையாளர் மீது தாக்குதலை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடை உரிமையாளர் மீது முதலில் போத்தலால் தாக்குதல் நடத்திய பின்னர் கைத்துப்பாக்கியை எடுத்து ஒருநபர் சுட்டதை தான் நேரில் பார்த்ததாகவும் அத்துப்பாக்கி சூட்டில் 5வயது சிறுமி மீதும் நெஞ்சில் காயமடைந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்ததாகவும் அவர் லண்டன் நகர காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை நடத்தியவர்கள் சைக்கிளில் தப்பி சென்றதாகவும் முகத்தை கறுப்பு துணியால் அவர்கள் மூடிகட்டியிருந்தாகவும் நேரில் கண்டசாட்சி தெரிவித்துள்ளார்.
கடை உரிமையாளர் கடைக்கு மேலே உள்ள மாடி குடியிருப்பில் வசிப்பவர் என்றும் காயமடைந்த 5 வயது சிறுமி தாயுடன் கடைக்கு வந்தபோது இத்துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உள்ளதாகவும் லண்டன் குற்றத்தடுப்பு பிரதம பரிசோதகர் ரொனி பௌவ்டன் தெரிவித்தார்.
காயமடைந்த சிறுமி கடை உரிமையாளரின் உறவினர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.லண்டன் நகர குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக