புதன், 12 அக்டோபர், 2011

பிறந்து 5நாட்களான குழந்தை மீட்பு

பிறந்து 5 நாட்களேயான பிஞ்சுக் குழந்தை ஒன்று அநாதரவாக வீதியில் போடப்பட்டு சென்றிருந்த நிலையில் அக்குழந்தையை பேருவளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பேருவளை - வதகாஹவெல காலி வீதியில் இக்குழந்தை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8 மணியளவில் இக்குழந்தையை மீட்ட பொலிஸார் அதனை பெண் குழந்தை என அடையாளம் கண்டதோடு சிகிச்சைகளுக்கென நாகொட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தையை தாய் உள்ளிட்ட பெற்றோர் யார் என பேருவளை பொலிஸார் தேடி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக