உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யபட்டு நாடுகடத்தபட்டுள்ளார். உலகத்தமிழர் பேரவையின் தலைவரான பாதர் இமானுவேல் நேற்றய தினம் ஜேர்மனியில் இருந்து இந்தியா சென்றிருந்தார்.
இந்தியாவில் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாயை சந்தித்து பேசுவதற்கு எனவும் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களை சந்திப்பதற்காகவும் இவர் இந்தியா சென்றிருந்தார்.
இவருடைய விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது இந்திய விசேட அதிகாரிகள் இவருடைய பெயரை ஒலிபெருக்கில் அறிவித்து விமானத்தில் வைத்தே இவரைக் கைது செய்தனர்.
இவர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலைய அதிகாரிகளின் விசேட உத்தரவுப்படி மீண்டும் வந்த விமானத்தில் டுபாய் ஊடாக நாடு கடத்தபட்டுள்ளார்.
இவர் மே18இன் பின்னரான காலப் பகுதியில் பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலக நாடுகளில் விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகங்களை ஒருங்கிணைத்து மக்களவை என்ற கட்டமைப்பை ஒழுங்கமைத்து அவை அனைத்தையும் ஒன்றிணைத்ததாக உலகத்தமிழர் பேரவை எனும் அமைப்பை உருவாக்கம் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக