இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சம்பவ இடத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் ஆயுதங்களுடன் இருந்த நபரை பிடித்தனர். எந்த எதிர்ப்பும் இல்லாமல் சரணடைந்த அவரின் பெயர் ஸ்காட் எவன்ஸ் டெக்ராய் (42) என்பது விசாரணையில் தெரியவந்தது.
எதிர்ப்பு தெரிவிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கும் டெக்ராயை காவலில் வைத்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று சீல் பீச் போலீஸ் அதிகாரி ஸ்டீவ் பவல்ஸ் தெரிவித்தார்.
மேலும் மெரிடேஸ் சலூன் கடையில் உள்ள அழகுகலை நிபுணர்களில் ஒருவரின் முன்னாள் கணவர் தான் டெக்ராய் என்றும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக