ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம்பர் 27,28ஆம் நாட்களில் இலங்கைத்தீவில் நடைபெற்ற யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களிற்கு, அனைத்துலக நாடுகளின் நடவடிக்கை குறித்தும் இலங்கைத் தீவில் இறுதி யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்தும் பிரான்சு நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குகளில் இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகளிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இராஜவரோதயம் சம்பந்தன், திரு. மாவை சேனாதிராஜா, திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. சிவசக்தி ஆனந்தன், திரு. சிவஞானம் சிறீதரன், திரு. பா.அரியநேந்திரன், திரு. யோகேஸ்வரன் சீனித்தம்பி ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திரு. பொன்னம்பலம் கஜேந்திரகுமார், திரு. செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
குறித்த கருத்தரங்கு நடக்கும் அதே நாளில் ஜேர்மனின் தலைநகரில் வேறொரு சந்திப்பு இருந்ததினால் தமிழ் அரசியற் கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியாத காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு சிவஞானம் சிறீதரன், திரு யோகேஸ்வரன் சீனித்தம்பி ஆகியோருடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திரு பொன்னம்பலம் கஜேந்திரகுமார், திரு செல்வராசா கஜேந்திரனும் பங்கு பற்றியிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக