திங்கள், 10 அக்டோபர், 2011

பாரீஸில் நடந்த பயங்கரக் கொள்ளை!



சனிக்கிழமை காலை Brie-Comte-Robert (Seine-et-Marne) அருகில் ஒரு தம்பதியினரையும் அவர்களின் பிள்ளைகளையும் கட்டி வைத்துவிட்டு கொள்ளையர்கள் வீட்டிலுள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாகக் கொள்ளையர்கள் வீடு முழுவதும் துழாவி நகைகள்பெறுமதியான பொருட்கள்பணம் என்பனவற்றை எடுத்துக் கொண்டு அவர்கள் வாகனத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 20,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. வீட்டிலிருந்தவர்கள் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
இவர்களை மீட்ட காவற்துறையினர் இவர்களை வைத்திய பரிசோதனைகளிற்காக அனுப்பியுள்ளனர். இன்னமும் இவர்களிடம் கொள்ளையின் சாட்சியங்கள் பெறப்படவில்லை.

வீட்டடில் தனியாக இருப்பவர்களும் மற்றவர்களும் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். தெரியாத நபர்கள் அழைப்பு மணி அடித்தால் கூட அவசியமில்லாமல் கதவு திறக்காதீர்கள். கதவு திறக்காத வரைக்கும் மட்டுமே உங்கள் பாதுகாப்பு உறுதியாகின்றது. தேவையற்ற நகைகளையும் பெறுமதியாக பொருட்களையும் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களில் இட்டு வையுங்கள். உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள். திருடர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்காதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக