யாழ். ஊர்காவற்றுறையிலிருந்து அனலைதீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகொன்று நடுக்கடலில் மூழ்கியபோதிலும், அப்படகில் பயணித்த 36 பொதுமக்களும்கடற்படையினரின் உதவியால் தெய்வாதீனமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
‘லோ லட்சுமி 2′ என்ற படகே நடுக்கடலில் மூழ்கியது. கடற்படையினரின் உதவி வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அனலைதீவுக்கு குறித்த படகு சென்றுகொண்டிருந்தபோதே பாறையொன்றில் மோதி மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடலில் பொதுமக்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதை அவதானித்த கடற்படையினர், அதிவேகப் படகுகளில் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை காப்பாற்றினர்.
பொதுமக்களை கரைக்கு மீட்டு வந்து அவர்களுக்கு முதலுதவி வழங்கிய கடற்படையினர், குறித்த சம்பவம் தொடர்பில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் வீடுகளுக்கு பொதுமக்களை அனுப்பிவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக