செவ்வாய், 11 அக்டோபர், 2011

கியுபா லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரவை ஒட்டு மொத்த தமிழினமும் கேட்கிறது!

2009 ஆம் ஆண்டு மே மாத மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கியூபா உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசாங்கத்திற்குச் சார்பாக வாக்களித்தன. கியூபா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இந்த நிலைப்பாடு தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது. இது விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலன்களுக்கும் எதிரான நிலைப்பாடாகும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் வி.ருத்ரகுமாரன் ஹவானா ரைம்ஸ் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எப்பொழுதும் பிடல் காஸ்ரோ மற்றும் சேகுவேரா ஆகியோரை மாவீரர்களாக மதித்து வந்துள்ளனர். 2009 மே மாத மனித உரிமைக் கூட்டத்தொடரிலிருந்து கியூபாவின் நிலைப்பாடு தொடர் பாக தமிழ் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஒருவேளை தொடர்பாடல் குறைபாட்டின் விளைவாக இந்நிலை ஏற் பட்டிருக்கலாம். எனவே, நாங்கள் கியூபா, வெனி சுவேலா மற்றும் ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு எமது குழு ஒன்றினை அனுப்பி வைத்து எமது நிலைப்பாட்டினை விளக்கிக் கூறுவதோடு தொடர்பாடலில் ஈடுபடும் முயற்சியை முன்னெடுக்கவுள்ளளோம் என ருத்ரகுமாரன் கூறுகின்றார். இது தொடர்பாக ஹவானா ரைம்ஸ் இதழில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தீவிலும் அதற்கு வெளியிலும் வாழும் தமிழர்கள் தற்பொழுதும் சுதந்திரத் தனியரசு மீது பேரவா கொண்டிருக்கின்றோம். எமது மக்களுக்கு எதிரான மஹிந்த ராஜ பக்ஷ‌ அரசாங்கத்தின் போர்க்குற்றங்களும் மோசமான கொடுமைகளும் அறியப்பட்டுள்ள புற நிலையில் எமது உரிமைப் பிரச்சினை முழு உலகத்தின் கவனத்தைப் பெற்றுப் பேசப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் வி.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளதாக ஹவானா ரைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சியின் ஆவ ணப்படமான இலங்கையின் கொலைக்களம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜூன் மாத கூட்டத்தொடரில் காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது உலகம் முழுவதும் பார்க்கப்பட்ட புறநிலையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான அங்கீகாரத்திற்கான சாதகமான சமிக்ஞை உருவாகியுள்ளது. 2009 இல் இலங்கைத் தீவின் உள் நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து தமிழர்களின் இறைமை உரிமைக்கான அனைத்துலக பிரதி நிதித்துவத்தின் தேவையை உணர்ந்த ருத்ரகுமாரன் மற்றும் ஏனைய தமிழ் நிபுணர்கள் மலேசியா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளில் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.அதன் ஊடாக தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு புலத்தில் தமிழ்த் தலைவர்கள் ஒரு சக்தியாக இணைந்து செயற்பட்ட தருணத்தில் கியூபா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடு களின் நிலைப்பாடு தொடர்பாக அவர்கள் அதிர்ச்சியும் கவலையும் கொண்டிருந்தனர். 2009 மே மாத மனித உரிமைகள் ஆணைக்குழு வின் கூட்டத் தொடரில் கியூபா உள் ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசாங்கத்திற்குச் சார்பாக வாக்களித்தன. இது விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நலன்களுக்கும் எதிரான நிலைப்பாடாகும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எந்தவொரு அரசாங்கத்துடனும் அனைத்துலக சக்திகளுடனும் தன்னைப் பிணைத்துக் கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் ருத்ரகுமாரன் தமக்கு ஒத்துழைப்பு வழங்கித் தமது உரிமைப் போராட்டத்திற்கு நாடுகள் வழங்கும் ஆதரவினை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிடுகின்றார்.

2010 ஆம் ஆண்டு 12 நாடுகளில் தேர்தல் நடாத்தப்பட்டு நாடு கடந்த அரசாங்கத்திற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். முதலா வது அமர்வு அமெரிக்காவின் மாநிலத்தில் பிடல் டெல்பியாவில் நடைபெற்றது. புலம்பெயர் நாடுகளில் உள்ள உள்ளூர் தேசிய மற்றும் அனைத்துலக தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்றுவது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூலோபாயமாகும். அதனூடாக முடிந்த வரையில் அனைத்து அரசாங்கங்களுடனும் இராஜதந்திர செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வலுமையத் தினை உருவாக்குவது அதன் நோக்கமாகும்.

இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தலைமையுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்படுவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விரும் புகின்றது. ஆனால், இலங்கைத் தீவில் அதற்கான அரசியல் வெளி இல்லாதிருப்பதால் அவ்வாறான தொடர்பு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இலங்கை சார்பு நிலையிலிருந்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்தியா மாறும் நிலை உருவாகும் என ருத்ரகுமாரன் கூறுகின்றார். புவிசார் அரசியல் சீனாவினதும் இந்தியாவினதும் நலன்களை நோக்கி நகர்கின்றது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கும் இன்றைய நிலை யில் அதனை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பாக இந்தியா குழம்பியுள்ளது. ராஜபக்ஷ‌­ அரசாங்கத்திற்கு முண்டுகொடுப்பது இந்தியா வின் தூரநோக்கு நலன்களுக்கு உகந்ததல்ல என்பதை இந்தியா விரைவில் உணர்ந்து கொள்ளுமென ருத்ரகுமாரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிவடைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டமை தொடர்பாகவும் ருத்ரகுமாரன் நம்பிக்கை கொண்டுள்ளார். இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்குழுவின் அறிக்கை 19 ஆவது கூட்டத்தொடரில் விவாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை மனித உரி மைகள் ஆணைக்குழுவின் கடந்த கூட்டத்தொடரில் தனக்கெதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் இலங்கை அரசாங்கம் மறுத்துரைத்த போது இதற்கு முந்தைய தொடர்களுக்கு மாறாக இந்தியா மற்றும் ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு வாய்மொழி ஆதரவு எதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என ஹவானா ரைம்ஸ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக