விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறி சுவிஸ் அரசாங்கம் 2010ஆண்டு இறுதியில் நீதிக்கு புறம்பான வகையில் 235க்கும் மேற்பட்ட தமிழர்களின் தொலைபேசி இலக்கங்களை கொழும்புக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அதன் காரணமாக கொழும்பில் பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போய் அல்லது நீதிக்கு புறம்பான முறையில் கொலை செய்யபட்டும் உள்ளார்கள் என SF எனப்படும் சுவிற்சலாந்து தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு சுவிஸ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் யாவும் சுவிற்சலாந்தில் உள்ள விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களினால் இலங்கையிலுள்ள தமது சொந்தங்களுடன் தொடர்பு கொண்ட இலக்கங்கள் ஆகும் என சுவிற்சலாந்து ஜனநாயக கட்சியின் லுசேர்ன் மாநில பாராளுமன்ற உறுப்பினரும், நடைபெற இருக்கும் சமஷ்டி நாடாளுமன்ற தேர்தலில் லுசேர்ன் மாநிலத்தில் போட்டியிடுபவருமான லதன் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
சுவிசிற்கான முன்னாள் இலங்கை துதூவர் மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் என்பவரே இதனைச்செய்ததாகவும் லதன் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
‘ நாங்கள் இவ்வாறான மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பினோம். ஆயினும் சுவிஸ் அரசாங்கமானது இந்த கொடூர செயலுக்கு அனுமதி வழங்கி இருந்தது’ என்றும் லதன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு பல இலங்கைத் தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பெயரில் சுவிஸ்சில் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரினதும் தொலைபேசி அழைப்புக்கள் நீண்ட காலமாக கண்காணிப்பு செய்யப்பட்ட பின்னர் அது தொடர்பான தகவல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இதனால் சுவிஸில் வசிக்கின்ற தமிழர்களின் இலங்கையில் உள்ள தங்களின் உறவினர்கள் நண்பர்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கின்றனர் என எஸ்.எவ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சுவிஸ் அரசினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து தொலைபேசி எண்களுமே தமிழர்கள் அடிக்கடி தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளும் கடைகளின் தொலைபேசி எண்களாகும். இதன் காரணமாக பல தமிழர்களின் பெயர்கள் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசினால் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி Max Birke Mair கருத்து வெளியிடுகையில், இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான செயல் என தெரிவித்தார்.
சுவிஸ் அரசினால் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி Max Birke Mair கருத்து வெளியிடுகையில், இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான செயல் என தெரிவித்தார்.
அரச வழக்கறிஞர் Patrick Camon தான் இலங்கைக்கு தரவுகள் அனுப்புதல் தொடர்பாக அனுமதி வழங்கியவர் ஆவர்.
சுவிஸ்சில் இயங்குகின்ற உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்குபவர்களின் சங்கமானது அரசாங்க தரப்பு வழக்கறிஞரின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் இது சிறிலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணையினை சுயாதீனமான முறையில் முன்னெடுத்துச் செல்லத் தடையாக உள்ளது என தெரிவித்துள்ளது.
சுவிஸ்சில் இயங்குகின்ற உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்குபவர்களின் சங்கமானது அரசாங்க தரப்பு வழக்கறிஞரின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் இது சிறிலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணையினை சுயாதீனமான முறையில் முன்னெடுத்துச் செல்லத் தடையாக உள்ளது என தெரிவித்துள்ளது.
சுவிஸ் சூரிச் பல்கலைக்கழக சட்டப்பேராசிரியர் ரைனெர் சென்வைசெர் இச்செயலினை வன்மையாக கண்டித்துள்ளார். இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் செயற்பாடு எனவும் தெரிவித்தார்.
சுவிஸ் நாடு தன்னை மனித உரிமையை மதிக்கின்ற நாடு என காட்டிக்கொண்டாலும் இலங்கை போன்ற போர்க்குற்றங்களை புரிகின்ற நாடுகளுக்கு உதவிகளை புரிந்து வருவதாகவும், சுவிஸின் இச்செயற்பாட்டினால் பல தமிழர்கள் சிறிலங்கா அரசாங்க புலனாய்வு படையினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக