விரைந்து வளர்ந்து வரும் வயது முதிர்ந்தோர் சனத்தொகையைக் கொண்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுள் ஒன்றாக இலங்கையும் உள்ளது. தற்சமயம் சனத்தொகையின் 10 சதவீதத்தினர் 60 இலும் கூடிய வயதுடையவராகவுள்ளனர். 2025இல் வயது முதிர்ந்தோர் சனத்தொகையின் 20 சதவீதமாக காணப்படுவர். இதில் ஆண்களைவிட பெண்கள் அதிக தொகையில் காணப்படுவர்.
கட்டிளமைப் பருவத்தினரும் இளைஞர்களும் தற்போது மக்கள் தொகையில் 26 சதவீதமாகவுள்ளனர். இலங்கையின் சனத்தொகைக் கூறில் முன்னொருபோதும் இளைஞர் பங்கு இவ்வளவும் அதிகமாக இருந்ததில்லை.
இலங்கையில் 15 - 24 வயதிற்கிடைப்பட்டோர் தொகை 5.6 மில்லியனாகும். இவர்களுக்கு இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் கருத்தடை பற்றி போதிய அறிவில்லையென ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் கூறியுள்ளது.
வேலையின்மை வீதம் 1990இல் 29 சதவீதமாக காணப்பட்டது. இது 2005இல் 30.5 சதவீதமாக அதிகரித்தது. கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவோர் தொகை 1987இல் 61.7 சதவீதமாக காணப்பட்டு 2007இல் 70.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் கருத்தடை சாதனங்களின் பாவனை மிகக்குறைவாகவுள்ளது. மட்டக்களப்பில் இது 34.5 சதவீதமாக குறைந்தளவிலுள்ளது.
சனத்தொகை அதிகரிக்கும்போது புதிய பிரச்சினைகள் உருவாகும். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக