வியாழன், 13 அக்டோபர், 2011

இந்தோனேசிய பாலி தீவில் 6.0 ரிச்டர் பூமியதிர்ச்சி _

இந்தோனேசிய பாலி தீவுக்கு அப்பால் இன்று தாக்கிய 6.0 ரிச்டர் பூமியதிர்ச்சியால் கட்டடங்கள் பல சேதமடைந்ததால் பெருந்தொகையான மக்கள் காயங்களுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலி தீவின் தலைநகர் டென்பாஸரிலிருந்து தென் மேற்கே 130 கிலோ மீற்றர் தூரத்தில் 61.3 கிலோ மீற்றர் ஆழத்தில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பூமியதிர்ச்சியின் போது கட்டடங்கள் நடுங்கியதால் மக்கள் அலறிடியடித்துக் கொண்டு வீடு வாசல்களை விட்டு ஓடியுள்ளனர். 


சுமார் 43 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 பேருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

"நெருப்பு வளையம்' என அழைக்கப்படும் இந்தோனேசியாவானது அடிக்கடி பூமியதிர்ச்சி சம்பவங்களையும் எரிமலை குமுறல்களையும் எதிர்கொண்டு வரும் நாடாக உள்ளது. _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக