ஞாயிறு, 9 அக்டோபர், 2011

யாழில் தந்தை பெயர் தெரியாது குழந்தை பெறும் பெண்கள்! காலாவதியாகி விட்ட எமது கலாசாரம்???

கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு குடும்ப வலைமைப்பை உருவாக்கித் தமக்கென ஒரு கலாசாரத்தை நிலைநாட்டி வாழ்ந்து வந்தது தமிழினம்.

ஆனால் தற்போது தரம்கெட்டு, தலைகுனிந்து தந்தை பெயர் தெரியாத குழந்தைகளைக் கையில் ஏந்தித் தவியாய்த் தவிக்கின்றனர் தமிழினப் பெண்கள்.



தமிழ்ப் பெண்கள் என்று சொன்னால் தரணி எங்கும் கைகூப்பித் தலைவணங்கிய காலம் போய் கண்டவர்கள் எல்லாம் கைவைத்து தங்கள் பாலியல் இச்சைகளை அரங்கேற்றும் காலம் மலர்ந்துள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் திருமணம் ஆகாமல் ஐந்து குழந்தைகளுக்குத் தாயாகியிருக்கிறார் ஒரு பெண்.

காலம் காலமாகக் கட்டிக்காத்து வந்த எமது கலாசாரம் காலாவதியாகிவிட்டது எனும் போது கவலையாக இருக்கின்றது என்று சொல்லுவதைத் தவிர வேறு எதுவுமில்லை.

அந்தளவுக்கு எமது காலாசாரத்தின் மகிமை மங்கிவிட்டது.



எனவே எமது கலாசாரத்தின் மகிமை மங்க வைத்த பெருமைக்கு வடமராட்சிப் பகுதியில் உள்ள 35 வயதுப் பெண் ஒருவரும் காரணம் எனலாம்.

அதாவது, வடமராட்சி வல்வெட்டித்துறை சமரபாகுப் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி பெண் தற்போது 8 மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்து, தந்தை பெயர் தெரியாத ஐந்தாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் தந்தை பெயர் தெரியாத குழந்தைகளைப் பெற்றெடுத்து வருவதுடன், முதலாவது குழந்தையைக் கழுத்து நெரித்துக் கொலை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் 10 வயதுப் பிள்ளை ஒன்றைத் தான் வளர்த்து வருவதுடன், இரண்டு குழந்தைகளைப் பணத்துக்காக விற்பனை செய்து விட்டதாகவும் அப் பிரதேச மக்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எனவே இது தொடர்பில் அப் பகுதி மக்கள் கிராம சேவகரிடம் முறையிட்டு கிராம சேவகரினால் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, பொலிஸாரின் விசாரணை நடைபெற்ற போதும் அப் பெண்ணின் கதறலைக் கண்டு விசாரணைகளைக் கைவிட்டனர் பொலிஸார்.

இது இவ்வாறிருக்க அப் பகுதியில் பல பெண்கள் இவ்வாறு திருமணம் ஆகாமல் தந்தை பெயர் தெரியாமல் குழந்தைகளைப் பெற்று வருகின்றனர் என அப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் அப் பகுதியில் இயங்கும்  தரம் 1 முதல் தரம் 11 வரையான பாடசாலைகள் ஒரு சமூகப் பாடசாலைகளாக இயங்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக