காரோடு துறைமுகப் பகுதிக்குள் பாய்ந்து வயதான முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹொலிவூட் படங்களில் வரும் காட்சிகள் போல அமைந்து விட்டது இவரின் வாழ்க்கையின் இறுதிப் பயணம்.
முதலில் பொலிஸார் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டதாக தான் நம்பினர்.
ஆனால் இன்று 89 வயதேயான உள்ளூர் மனிதர் ஒருவரே தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு மெட்ரோபொலிற்றன் பொலிஸில் இருந்து சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு பலத்த தேடுதலின் பின்னர் கிரேனின் உதவியுடன் நீரில் மூழ்கிய வாகனம் மீட்க்கப்பட்டது.
லண்டனின் Southwold, Suffolk பிரதேசத்தில் உள்ள 20 அடி ஆழமான ஆறு ஒன்றில் இருந்தே மேற்படி கார் மீட்க்கப்பட்டது.
வேகமாக வந்த கார் தடைகளையும் உடைத்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக Suffolk பிராந்திய பொலிஸ் அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,
Southwold துறைமுகப் பிரதேசத்தில் இருந்து ஒரு வாகனம் மீட்க்கப்பட்டது. அதிலிருந்து இறந்த ஒருவரின் சடலமும் மீட்க்கப்பட்டது. காரின் கதவுகள் பாதுகாப்பானவையாக இருந்தன.
சினிமாவையும் மிஞ்சி விட்டார் இந்த தாத்தா....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக