நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவை நடத்தும் இருநாள் கலாசார விழாவின் முதலாம் நாள் நிகழ்வுகள் 30.09.2011 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு நல்லூர் சட்டநாதர் வீதியில் உள்ள இளங்கலைஞர் மன்றத்தில் உதவிப் பிரதேச செயலர் அ.சோதிநாதன் தலைமையில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கமும் சிறப்பு விருந்தினராக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க யாழ். கிளைத் தலைவர் பேராசிரியர் வி.கே. கணேசலிங்கமும் கலந்து கொண்டனர். நிகழ்வில் பல்வேறு கலைநிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன. சிறப்புக் கலை நிகழ்வுகளாக புலரும் பொழுதும் புனித உணர்வும் என்ற தலைப்பில் அமைந்து கவியரங்கம் பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு தலைமையில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அரியாலை பத்மா கலை மன்றத்தினரின் அரிச்சந்திரா மயான காண்டம் - இசை நாடகம் இடம்பெற்றது.
01-10-2011 சனிக்கிழமை அன்று பிற்பகல் 1.30 மணிக்கு பிரதேச செயலர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இடம்பெறும். இதில் பிரதம விருந்தினராக அரச அதிபர் இமெல்டா சுகுமார் கலந்து கொள்ளவிருக்கிறார். கலைஞானச் சுடர் என்ற பிரதேச மலரும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இதேவேளை நாளை 01.10.2011 சனிக்கிழமை இடம்பெறும் விழாவின் போது பின்வருவோர் கலைஞானச் சுடர் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்னர்.
01. செல்லப்பா நடராசா – ஊடகத்துறை
02. ம.பார்வதிநாத சிவம் - கவிதை
03. சந்திரா சரவணமுத்து – கிராமியக் கலை
04. ஆ.கந்தசாமி – சிற்பம்
05. க.சுந்தரலிங்கம் - ஓவியம்
06. பத்தினியம்மா திலகநாயகம்போல் - புனைகதை
07. தம்பு சிவலிங்கம் - நாடகம்
08. வி.சிவஞானசேகரம் - கர்நாடக இசை
09. வி.கே. பஞ்சமூர்த்தி – நாதஸ்வரம்
10. கலாநிதி செ.திருநாவுக்கரசு - இலக்கியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக