இத்தாலியின் கோடீஸ்வர தொழிலதிபர் பெர்லுஸ்கோனி. கடந்த 18 ஆண்டுகளாக அந்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார். 2009ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய நிதி நெருக்கடியில் இத்தாலியும் சிக்கியது. கடன் சுமையை குறைக்க இத்தாலியில் சிக்கன நடவடிக்கைகள் உடனடி தேவை என ஐரோப்பிய மத்திய வங்கி எச்சரித் தது. அதற்கான பட்ஜெட்டை கடந்த வாரத்தில் அரசு தாக்கல் செய்தது.
அதன் மீது நடந்த வாக்கெடுப்பில் நிதி அமைச்சரே குறிப்பிட்ட நேரத்துக்குள் வாக்களிக்காததால் அது செல்லாமல் போனது. பட்ஜெட் நிராகரிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மொத்தமுள்ள 630 இடங்களில் 316 ஓட்டு பெற் றால் வெல்ல முடியும் என்ற நிலையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் அரசை காப்பாற்றத் தேவையான 316 ஓட்டுகள் பெற்று நூலிழையில் பெர்லுஸ்கோனியின் அரசு தப்பியது. எதிராக 309 ஓட்டுகள் பதிவாகின.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக