வியாழன், 6 அக்டோபர், 2011

ஐ.நா. சபையில் இணையத் துடிக்கும் பலஸ்தீனத்திற்கு முதல் வெற்றி

ஐ.நா. சபையில் உறுப்பு நாடாக இடம்பெற முயற்சி செய்யும் பலஸ்தீனத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த ஐ.நா.வின் யுனெஸ்கோ செயற்குழு கூட்டத்தில் பலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு ஆதரவாக 40 நாடுகளும் எதிராக 4 நாடுகளும் வாக்களித்தன.

இதன்போது 14 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

இந்த முடிவுகள் இம்மாத இறுதியில் ஐ.நா. பொது சபையில் சமர்ப்பிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக