யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக தோன்றியுள்ள உஷ்ணமான காலநிலை மாற்றத்தால் நவம்பர் மாதமளவில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய அவதானிப்பாளர் த.பிரதீபன் தெரிவித்தார்.
மேலும், 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் வரை 32.1 பாகை செல்சியஸ் உயர் வெப்ப நிலையாகவும், 27.1 பாகை செல்சியஸ் சராசரி இழிவு வெப்ப நிலையாகவும், 29.4 பாகை செல்சியஸ் சராசரி வெப்ப நிலையாகவும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த வருடத்திற்கான மழை வீழ்ச்சியாக செப்டெம்பர் 30ஆம் திகதி 9.9 மில்லிமீற்றர் மழையும், ஒக்டோபர் 4 ஆம் திகதி 12.06 மில்லி மீற்றர் மழையும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நவம்பர் மாதமளவில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றது. சூறாவளி வங்களா விரிகுடாவில் இருந்து இலங்கை நோக்கி வருவதற்கான சாத்தியம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக