வியாழன், 6 அக்டோபர், 2011

எழுவான்கரையை வரவேற்ற படுவான்கரை!


சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பிரதான பிரிவுகளாக இருக்கும் எழுவான்கரையை படுவான்கரை வரவேற்ற சம்பவம் நடைபெற்றது.
மட்டக்களப்பு நகர்பகுதியான  எழுவான்கரையில் இருந்து படுவான்கரை பிரதேசத்துக்கு கல்வி புகட்ட செல்லும் ஆசியர்களை படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் பகுதியில் வைத்து படுவான்கரை மாணவர்கள் வரவேற்றனர்.

ஆசிரியர்களுக்கு பூ சொரிந்து,  திலகமிட்டு, மாலை அணிவித்து மாணவர்கள் ஆசிரியர்களை வரவேற்றனர்.
பட்டிருப்பு பாலம், அம்பிலாந்துறைபாதை, மண்முனைபாதை, வவுணதீவு பாலம் ஆகியவற்றில் வைத்து மாணவர்கள் இந்த வரவேற்பை வழங்கினர்.
நாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான் உங்கள் கோப்பையில் சோறு இருக்கும் என பெருமை பேசும் படுவான்கரை மக்களும், எழுத்தறிவிக்கும் ஏணிகளாக நாங்கள் தான் இருக்கிறோம், நிர்வாகம் எங்கள் கைகளில்தான் இருக்கிறது என்ற இறுமாப்பில் படுவான்கரை மக்களை அடக்கி ஆளநினைக்கும் எழுவான்கரை மக்களுக்கும் இடையில் நீண்டகாலமாக போட்டி நிலவி வருவது வழமையாகும்.
இந்த இடைவெளிகளை தகர்க்கும் வகையில் மாணவர்கள் படுவான்கரை எடுவான்கரை எல்லையில் வைத்து ஆசிரியர்களை வரவேற்றனர்.
போக்குவரத்து கஷ்டங்களின் மத்தியில் எழுவான்கரை பகுதி ஆசிரியர்கள் படுவான்கரைக்கு சென்று கல்வி புகட்டிவருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக