மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை வவுனியா நகரசபை மைதானத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தத் தகவலை தெரிவித்தனர்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வைரவப் புளியங்குளம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், என். சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த. சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டத் தலைவர் டேவிட் நாகநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தராகிய கந்தையா சிவநேசன் மற்றும் முன்னாள் வவுனியா நகர சபைத் தலைவர் ஜி. ரி. லிங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யுத்தம் முடிந்ததும் அரசாங்கம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன் வைக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் நாளுக்கு நாள் மக்களுக்குப் பிரச்சினைகள் அதிகரித்தனவே தவிர பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்திற்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. இதனால் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்காமல் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும் செயற்படவும் முன்வந்துள்ளன.
இன்று தமிழ் மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும், முக்கியமாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற காணிப் பதிவுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கிராமங்களை உள்ளடக்கியதாகப் புதிய உதவி அரசாங்க அதிபர் பிரிவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை, இராணுவத்தினருக்கென குடியிருப்புக்களை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நில அபகரிப்பு ஆகிய விடயங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என இந்தச் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது.
இந்த உண்ணாவிரதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், கிராம மட்டத்திலான கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை காணி பதிவுகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்கப்படுகின்ற புதிய சிங்கள உதவி அரசாங்க அதிபர் பிரிவு, இராணுவத்திற்கான காணி அபகரிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் உட்பட தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள், சொந்த இடங்களில் இன்னும் மீள்குடியேற்றப்படாதுள்ள இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் பிரச்சினைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு நாள் விவாதம் நடத்தவுள்ளது. அதனைத் தொடர்ந்து காணிகள் விடயமாகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நீதிமன்றத்தை நாடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக இந்த செய்தியாளர் சந்திப்பின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். _

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக