ஞாயிறு, 2 அக்டோபர், 2011

யாரும் நிரந்தர முதல்வர் இல்லை - தேமுதிக தலைவர் விஜயகாந்த்


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேமுதிக வேட்பாளர் கோமதி, நகராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேமுதிக கூட்டணி கட்சி வேட்பாளர் களை ஆதரித்து கும்பகோணம் மகாமக குளம் மேல்கரையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது, விஜயகாந்த் பேசியதாவது:
மக்களாகிய நீங்கள் எதற்கெடுத்தாலும் கைதட்டுகிறீர்கள். அதனால்தான் உங்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுகின்றனர். எனவே சிந்தித்து வாக்களியுங்கள்.
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தனக்கு ஞாபக மறதி அதிகமாக உள்ளது என்கிறார். கணக்கு தெரியவில்லை என கூறியது பத்திரிகைகளில் வந்துள்ளது. இவர்கள் எத்தனை பேருக்கு கடன் கொடுத்து வாங்க மறந்துள்ளார்கள்.
கல்விக்கு கடன் கொடுப்பதாக கூறுகின்றனர். இதற்கு 60% மதிப்பெண்கள் தேவை. நகரங்களில் படிப்பவர்கள் 60% மதிப்பெண்கள் பெறுகின்றனர்.

ஆனால் கிராமப்புற மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறமுடியாததால் கல்வி கடன் வாங்க முடியவில்லை.
இரண்டு அரசியல் கட்சிகளுக்கு என்ன வேலை என்றால் மாறி மாறி தவறு செய்வதுதான் என்று நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் 5 தடவை ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை. நேற்று ஒரு எம்எல்ஏ, இன்று 29 எம்எல்ஏ. நாளை மக்கள் சிந்தனை செய்து வாக்களித்தால் மாற்றங்கள் ஏற்படும்.
தமிழகத்தில் யாரும் நிரந்தர முதல்வர் இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக