சில தினங்களுக்கு முன்னர் மெட்ரோவினுள் வன்முறையாளன் ஒருவனால் ஒரு பெண் தாக்கப்பட்டபோது அப்பெண்ணைக் காப்பதற்காகச் சென்று உயிரிழந்தவர் தான் இந்த பாபு. பிரெஞ்சுப் பத்திரிகைகளும் இணையத்தளங்களும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தன. இருந்த போதும் அந்த இளைஞன் சிறீலங்காவைச் சேர்ந்தவர் என்றே குறிப்பிட்டிருந்தன. இதன் அடிப்படையில் செய்தி வழங்கிய நாமும் அந்த இளைஞன் ஒரு சிறிலங்காத் தமிழ் இளைஞன் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனாலும் இந்த இளைஞன் 33 வயதுடைய பாபு என்று அழைக்கப்படும் ரஜீந்தர் சிங் எனும் இந்திய இளைஞனாவார்.முதலாவதாக பிரெஞ்சுப் பத்திரிகைச் செய்தியைத் தழுவித் தவறான அடையாளம் தந்தமைக்காக வருந்துகின்றோம்.
இந்த இளைஞனின் புகைப்படத்தை LE PARISIEN பத்திரிகை தனது அச்சுப்பதிப்பிலும் இணையத்தளத்திரும் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்திகளிற்கு ஏராளமானோர் தமது கருத்துக்களையும் அனுதாபங்களையும் தெரிவித்ததாகக் கூறியிருக்கும் LE PARISIENதமது வாசகர்கள் இந்த இளைஞனுக்காக அவரது உடலத்தை இந்தியாவிற்கு எடுத்துச் செல்லத் தேவைப்படும் 5000 யூரோக்களைத் தர முயன்ற தாகக் கூறியுள்ளனர். கலாச்சார அமைச்சர் Frédéric Mitterrand தனது பங்கையும் வழங்குவதாக பாபுவின் உறினர்க்க்குத் தெரிவித்திருந்தார்.
ஆனால் மிகவும் அபூர்மாக RATP பரிசின் போக்குவரத்து சம்மேளனத்தின் (Fondation RATP ) தலைவர் Pierre Mongin தமது சம்மேளனமே முழுமையாக பாபுவின் உடலம் இந்தியா செல்வதற்கான பொறுப்பை ஏற்பதாகக் கூறியுள்ளார்.
இன்று புதன்கிழமை Crimée மெட்ரோ நிலையத்தில் பாபுவிற்காக மலர் வணக்க நிகழ்வொன்றை பரிசின் போக்குவரத்து சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.
இவற்றிற்கு அப்பால் பாபுவைத் தள்ளி விட்டுக் கொலை செய்த வன்முறையாளனைக் காவற்துறையினரும் தொடருந்துக் காவற்துறையினரும் (Sous-direction régionale de la police des transports (SDRPT)) இணைந்து தேடி வந்தனர்.
மெட்ரோவினுள்ளும் நிலையத்திலிருந்தும் எடுக்கப்பட்ட கண்ணகாணிப்புக் கருவியின் தெளிவான புகைப்படங்கள் இவர்களிற்குக் கிடைத்தது. இந்த படங்களை ஆராய்ந்த சிறப்புப் பிரிவினர் அதில் வன்முறையாளன் கையில் வைத்திருந்த ஒரு இனிப்புப் பையை அவதானித்துள்ளனர். அது சாதராணக் கடைகளில் விற்கும் இனிப்புப் போலல்லாது வித்தியாசமாகப் படவே புலனாய்வு அதனைச் சுற்றித் தொடர்ந்தது.
Pigaleல் இருக்கும் ஒரு கடையிலேயே அந்த இனிப்பு வாங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அந்தச் சுற்றாடல் கண்காணிக்கப்பட்டது. நேற்று அவ்விடத்திற்கு அருகிலிருக்கும் மதுபானக் குளிர்பானக் கடைக்கு (BAR) வந்த வன்முறையாளன் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் 22 வயதுடைய எகிப்து தேசத்தைச் சேர்ந்தவனாவான்.
காவற்துறையின் சிறப்புப் புலனாய்வு இவ்வளவு விரைவாகக் குற்றவாளியைக் கண்டு பிடித்துள்ளது. ஒரு இளைஞனின் மனிதாபிமானத்தைப் பொறுக்காது கொலை வரை சென்ற குற்றவாளி விரைவாக அகப்பட்டது அந்த இளைஞனின் தியாகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
LE PARISIEN ல் கருத்துத் தெரிவித்துள்ள ஒருவர் ' ஒரு தாக்கப்பட்ட பெண்ணிற்கும் வன்முறையானிற்குமிடையில் புகுந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயன்றதாலேயே பாபு உயிரிழந்துள்ளான். இதே மனிதாபிமானம் எம் எல்லோருக்கும் இருந்திருக்குமானால் இன்று நாம் பாபு எம்மிடையே உயிரோடு இருந்திருப்பான்' எனக் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமானம் என்பது மக்களிடையயே குறையக்குறையவே மனிதாபிமானமற்ற குற்ச் செயல்கள் அதிகரிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக