யாழ் நகர் முற்ற வெளிப்பகுதியில் செவ்வாய் இரவு -யாழ் கொழும்பு சேவையில் ஈடுபடும் பஸ்சின் உரிமையாளர் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி தலையில் படுகாயத்துடன் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொக்குவில் மேற்கு ஐயனார் கோயிலடியைச் சேர்ந்த வசந்தநாயகம் விதுலன் (வயது20) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்கானவர் ஆவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பிரஸ்தாப இளைஞர் வழமை போல நேற்றிரவு 7.30 மணியளவில் பயணிகளுக்கான ஆசனப்பதிவை மேற்கொண்டிருந்த வேளை திடீரென மழைபெய்துள்ளது. அதை அடுத்து வெளியில் நின்ற மோட்டார் சைக்கிளை எடுக்கச் சென்ற வேளை அந்த இடத்துக்கு நடந்து வந்த இருவரில் ஒருவன் வாளால் வெட்டியுள்ளான். பின்னர் இருவரும் தப்பியோடி விட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக