புதன், 5 அக்டோபர், 2011

யாழ் மத்திய கல்லூரிக்கு புதிய கணனிக் கூடம் அமைச்சர் திறந்து வைப்பு!


யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கென கனடா பழைய மாணவர் சங்கத்தினால் புதிதாக நவீன முறையில் அமைக்கப்பட்ட கணனிக் கூடத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார். 


யாழ் மத்திய கல்லூரிக்கென கனடா பழைய மாணவர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் கோம் எவ் கோப் என்ற மத நிறுவனம் 40 கணனிகளை கொண்டதான நவீன கணனிக் கூடத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

முன்பதாக கல்லூரியின் பிரதான வாயிலிலிருந்து மாணவர்களின் இசை அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்ட அமைச்சர் அவர்கள் புதிய கணனிக் கூடத்தை திறந்து வைத்ததுடன் அதன் பணிகளையும் சம்பிராயப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக