புதன், 5 அக்டோபர், 2011

ஊர்காவற்றுறைப் பகுதியின் அநேக பாடசாலைகளில்; அதிபர்கள், ஆசிரியர்கள் வருகையில் தாமதம் மாணவர்கள் வெளியில் காத்திருக்கும் அவலம்


newsஊர்காவற்றுறை பிரதேச செயலர்பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு உரிய நேரத்துக்கு அதிபர்கள், ஆசிரியர்கள் வருகை தராமையால் மாணவர்கள் பாடசாலைக்கு வெளியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது: ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அமைந்துள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் யாழ். நகரப் பகுதிகளில் இருந்து வருகை தருகின்றனர். இவர்கள் பாடசாலை ஆரம்பமாகும் நேரத்துக்கு குறித்த பாடசாலைகளுக்கு வருவதில்லை என்றும் முறைப்பாடு தெரிவிக்கப்படுகின்றது.பாடசாலைகளுக்கு நேரத்துடன் செல்லும் மாணவர்கள் பாடசாலைக்கு வெளியில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. அத்துடன் சில பாடசாலைகளில் முதலாம் பாட வேளை நேரம் தாமதித்து ஆரம்பமாவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாழ். நகரப் பகுதியிலிருந்து காலை 8 மணிக்கே தனியார் பேருந்துகளில் புறப்படுகின்றனர். இதனாலேயே தீவகப் பகுதி பாடசாலைகளுக்கு செல்வதற்கு நேரதாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே ஆசிரியர்கள், அதிபர்கள் உரிய நேரத்துக்கு பாடசாலைக்கு வருகை தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதேவேளை அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள குறிப்பிட்ட பாடசாலை ஒன்றில் அதிபர் பெரும்பாலான நாள்கள் கடமைக்கு வருவதில்லை என்று முறைப்பாடு தெரிவிக்கப்படுகிறது.                   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக