சனி, 3 மார்ச், 2012

கச்சதீவு

1974 இல் செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய கடலோர எல்லைகள் ஒப்பந்தத்தின் மூலம் அதுவரை காலமும் சர்ச்சைக்குரியதாக காணப்பட்ட கச்சதீவுப் பகுதி இலங்கையின் எல்லைக்குள் வீழ்ந்தது. இதனை எதிர்த்து தமிழ்நாட்டிலும், அகில இந்திய ரீதியிலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. இருப்பினும் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட சில சரத்துகள் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக கச்சதீவுப் பகுதியில் அனுபவித்த உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க உதவியமையால் காலப்போக்கில் கச்சதீவு தொடர்பான விவகாரம் தணியலாயிற்று.

1983 இல் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு பாதுகாப்புக் கருதி மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் கடல் வலயத் தடைச் சட்டம் காரணமாக கச்சதீவு கடற்பிராந்தியம் ஓர் அமைதியற்ற பிராந்தியமாக மாற வழி வகுத்தது.

இலங்கை - இந்தியாவுக்கிடையில் அமைந்துள்ள கடற் பரப்புக்கள் பாரம்பரிய நீர்ப்பரப்புக்கள் எனப்படுகின்றன. இவை மூன்று நீர்ப்பரப்புக்களாகப் பிரிக்கப்படுகின்றன.

1. வங்களாவிரிகுடாப் பகுதி - இது பாக்கு நீரிணையை அடுத்து யாழ்ப்பாணக் குடா நாட்டின் வடகரையோரம் அமைந்துள்ளது.
2. பாக்குநீரிணைப் பகுதி - இது ஆதாம்பாலத்திலிருந்து வடகிழக்காக யாழ்ப்பாண வடமேற்கு கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது.
3. மன்னார் குடாப்பகுதி - இது ஆதாம் பாலத்திலிருந்து மன்னார்த் தீவின் தென்பகுதி சார்ந்து அமைந்துள்ளது.
மன்னார்த்தீவு, ஆதாம்பாலம், பாம்பன்தீவு என்பன இந்த பாரம்பரிய நீர்ப்பரப்புப் பகுதியினை இரு கூறாகப் பிரிக்கின்றன. இந்த நீர்ப்பரப்பில் பாக்கு நீரிணைப் பகுதியே மிக ஒடுங்கிய கடற்பரப்பாகும். இவ் ஒடுங்கிய அமைப்பானது தமிழ் நாட்டுக் கரையோரத்தினதும், இலங்கையின் வடபகுதி கரையோரத்தினதும் வரலாற்றையும், பொருளாதாரத்தையும். பண்பாட்டையும் ஆழமாகப் பாதித்துள்ளது. இலங்கை - இந்தியத் தமிழர்களை ஐக்கியப்படுத்துவதுடன் அவர்களைப் பிரித்தும் உள்ளது. இதன் விளைவாக இரு நாடுகளிடையேயும் நிர்வாக மற்றும் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது.

வரலாற்று ரீதியாகவே இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் விரிவடைவதற்கு இவ் ஒடுங்கிய நீர்ப்பரப்பு முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர் இலங்கையின் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கென ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை இவ்வழியாகவே கொண்டு வந்தனர். தென்னிந்தியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் சட்டத்திற்குப் புறம்பாக இந்நீரிணை வழியாக, இலங்கை வந்தனர். இதேபோன்று 1983 ஜுலை கலவரத்தின் பின்னர் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்குத் தப்பி ஓடியதும் இந்நீரிணை வழியாகவே.

கச்சதீவு என்பதன் பொருள் இரண்டு சொற்களால் ஆனது சமஸ்கிருதத்தில் கச் என்பது கடற்கரையையும் தீவு என்பது நீர்சூழ் நிலத்தையும் குறித்து நிற்கிறது. ஆகவே கச்சதீவு என்பதை கடற்கரைத்தீவு என வரையறை செய்யலாம்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்கில் அமைந்துள்ள சப்த தீவுகள் எனப்படுகின்ற பிரதான ஏழு தீவுகளுடன் பாலைதீவு, இரணை தீவு, கக்கிர தீவு என்பவற்றுடன் கச்சதீவையும் சேர்த்து பதினொரு தீவுகள் அமைந்துள்ளன. இவற்றுள் இரணைதீவு தவிர்ந்த கச்சதீவு, பாலைதீவு, கக்கிரதீவு ஆகிய மூன்றும் மக்கள் வாழிடமற்ற வெறும் தீவுகளாகவே காணப்படுகின்றன.

கச்சதீவானது நெடுந்தீவிற்கு தென்மேற்கே ஏறக்குறைய (9 மைல்) 14.4 கிலோமீற்றஎ தொலைவிலும் பாம்பன் - இராமேஸ்வரத்திலிருந்து வடகிழக்கே (10 மைல்) 16 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையையும் இந்தியாவையும் ஊடறுத்துச் செல்லும் ஒடுங்கிய பாக்குநீரிணையின் மையப்பகுதியில் இத்தீவு அமைந்துள்ளது.

இத்தீவின் நீளம் சராசரியாக (1 மைல்) 1.6 கிலோமீற்றர் மற்றும் அகலம் சராசரியாக (300 யார்) 275 மீற்றர் ஆகும். இதன் பரப்பளவு 82 ஹெக்டர்கள் ஆகும். இங்கு வரண்ட வலயத்திற்குரிய முட்புதர்கள் தவிர சிறிய புற்றரைகளும் கடற்கரையோரத் தாவரங்களும் படர்ந்துள்ளன. இதன் கிழக்கு அரைப்பகுதி முருகைக் கற்களால் ஆனது. மற்றைய பகுதி மணற்றிட்டுகளைக் கொண்டு காணப்படுகின்றது. நன்னீர் நிலைகள் எதுவுமற்ற இத்தீவில் எவ்வித மிருகங்களும் இல்லை. கடற்பாம்புகள் அவ்வப்போது தென்படுகின்றன.

1974 இல் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமாகிய பின்னர் தேர்தல் மாவட்டப் பிரிவைக் காட்டும் இலங்கைத் தேசப்படத்தில் இத்தீவானது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இல: 10/ ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி இல: 89 பிரிவினுள் காட்டப்பட்டுள்ளது. கி. சே. பிரிவு - நெடுந்தீவாகும். நீதி நிர்வாகப் பிரிவு யாழ்ப்பாண மாவட்டமாகும்.

கச்சதீவுப் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர்கள் இத்தீவில் தற்காலகமாகத் தங்கி இளைப்பாறுவதுடன் மீன்களைக் கருவாடிடும் முயற்சிகளிலும் ஈடுவடுவதுண்டு. அத்துடன் சங்கு, அட்டை, முத்துக்குளித்தல் நடவடிக்கைகளும் இத்தீவு சார்ந்து மேற்கொள்ளப்படுவதுண்டு.

மேலும் இந்திய கமக்காரர்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் இத்தீவினைப் பயன்படுத்தியுள்ளனர். மருத்துவத்திற்கான மூலிகைகளும் இங்கு பெறப்பட்டுள்ளன. 2 ஆம் உலக யுத்தத்தின் போது இத்தீவு துப்பாக்கி சுடுதல், குண்டு வீசுதல் ஆகியவற்றின் பயிற்சிக் களமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக இத்தீவு மக்கள் குடியேற்றம் அல்லாத பகுதியாக இருந்தபோதிலும் கலாசார, பொருளாதார, அரசியல், இராணுவ ரீதியில் முக்கியத்துவம் உடைய ஒரு இடமாக விளங்கி வந்துள்ளது.

கச்சதீவானது சிறந்த சமுத்திரவியற் பின்னணி காரணமாக வரலாற்று ரீதியாக நீண்டகாலமாக முத்துக் குளித்தல், சங்கு சேகரித்தல் என்பவற்றுடன் மீன்பிடியும் நல்லமுறையில் வளர்ச்சியடைந்துள்ளது. இன்று அட்டை சேகரித்தல், இறால் உற்பத்தி மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இறால், கடலட்டை, சங்கு உற்பத்திகளும் இப் பிரதேசத்திலிருந்தே கூடுதலாகப் பெறப்படுகின்றது. இப் பிரதேசம் இறாலுக்கு சிறப்பான இடம் ஆகையினால் இப் பகுதி இறால் வங்கி என அழைக்கப்படுகின்றது.

கச்சதீவில் 1913 ஆம் ஆண்டில் றோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்று கட்டப்பட்டுப் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பாலைதீவிலும் 1895இல் புனித அந்தோனியர் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் இக்கடற்பரப்பில் மீன் பிடித்தலுக்காகச் சென்ற கரையோர மீனவர்கள் கடலில் அடிக்கடி தாம் சந்திக்கும் ஆபத்துக்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும், தொழில் முயற்சிகள் நல்லமுறையில் கைகூட வேண்டுமென்று கருதி பாது காவலராகப் புனித அந்தோனியார் சொரூபம் ஒன்றை வைத்து சிறிய ஆலயம் ஒன்றைக் கட்டியிருக்க வேண்டும் என சொல்லப்படுகின்றது.

இக்கோயில்லை நம்புதாளை என்ற சிற்றூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கட்டினார். அவர் சென்ற படகு புயலில் சிக்கியபோது அவர் அந்தோனியாரை வேண்டிக் கொண்டார். அதன் காரணமாக அவர் புயல் அபாயத்திலிருந்து தப்பியதாகவும் அதனால் அவர் அந்தக் கோயிலைக் கட்டினார் என்றும் கூறப்படுகின்றது.

இராமாயணபுரத்தின் 1972 வர்த்தமானிப்படி இத்திருவிழாவின்போது இராமேஸ்வரத்துக்கு அண்மையிலுள்ள கங்கச்சி மடத்திலிருந்து ஒரு கத்தோலிக்கக் குருவானவர் கச்சதீவுக்குப் போய் அங்கு கிருவிருந்து நடத்துவார். இந்தத் தேவாலயம் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவரான சீனிக்குப்பன் படையாட்சியால் கட்டப்பட்டது. இப்பகுதி மக்கள் தமது ஆத்ம திருப்தி கருதி இவ்ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடத்தி வருகின்றனர்.

கச்சதீவிலும், பாலைதீவிலும் கட்டப்பட்டுள்ள ஆலயங்களின் நிர்வாகம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரின் கீழ் உள்ளது. பாலைதீவு ஆலயமானது வலைப்பாடு கோயிற் பங்கின் கீழும், கச்சதீவு ஆலயமானது நெடுந்தீவு கோயிற் பங்கின் கீழும் கண்காணிக்கப்படுகின்றன. இவ் ஆலயங்களில் வருடந்தோறும் வழிபாடுகளானது பாஸ்கு திருவிழாக் காலங்களிலேயே நடைபெற்று வருகின்றன. பங்குனி அல்லது சித்திரை மாதப் பகுதிகளில் கொண்டாடப்படுகின்ற பாஸ்கு திருவிழா 6 வாரங்களைக் கொண்டது (40 தினங்கள்). இதன் மூன்றாவது வாரத்தில் கச்சதீவிலும், நான்காம் வாரத்தில் பாலைதீவிலும் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 3 தினங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்ளுகின்றனர். குறிப்பிட்ட பங்கினைச் சேர்ந்த குருவானவரும் கோயில் நிர்வாக சபையினரும் இவ் விழாவினை ஒழுங்கு செய்கின்றனர். ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சோளகம் தொடங்கிவிடுவதால் அக்காலத்தில் கடல் அலைகளின் தாக்கம் சற்று உயர்வாக இருக்கும். இதனால் படகுகளில் செல்வது கடினம். இதன் காரணமாகவே சோளகத்தின் முன்னர் அங்கு சென்று திரும்பிவிட வேண்டும்; என்பதற்காக இக்காலப்பகுதியைத் தெரிவு செய்துள்ளதாக வெளிக்கள ஆய்வின்மூலம் அறியப்பட்டுள்ளது.

கச்சதீவுக்கு குருநகர், ஊர்காவற்றுறை நெடுந்தீவு, குறிகட்டுவான், மைலிட்டி, தலைமன்னார், பேசாலை ஆகிய துறைகளிலிருந்து இயந்திர வள்ளங்களில் யாத்திரிகர்கள் சென்றனர். கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி இந்துக்களும் முஸ்லீம்களும் வழிபாடு கருதியும், வர்த்தக நோக்கம் கருதியும் அங்கு சென்றனர். இலங்கையைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களும் இக்காலப் பகுதிகளில் இங்கு வருகை தருவது வழக்கம். இவர்கள் சமய நோக்கங்களுக்காக மட்டுமன்றி இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களாகவுள்ள தங்களது உறவினர்களைச் சந்தித்து மகிழ்ச்சி கொள்ளும்; நோக்கத்திற்காகவும் இங்கு வருகை தந்தனர். விழாக் காலங்களில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சமூகமும் பெருமளவில் இத் தீவிற்கு வந்து செல்வதுண்டு.

மேலும் இங்கு சிறிய அளவில் வர்த்தகப் பண்டமாற்று வியாபாரமும் நடைபெறுவதுண்டு. இலங்கையில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தேங்காய், தேங்காய் எண்ணெய், சோப், வாசனைப் பொருட்கள் கொண்டு செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து சங்குப் பொருட்கள், வளையல்கள், அப்பிள், ஆடைகள் என்பன கொண்டுவரப்பட்டன. இவை பண்டமாற்று அடிப்படையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

திங்கள், 24 அக்டோபர், 2011

மரண அறிவித்தல்-திரு குமாரு சோமசுந்தரம் (ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் )



புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது யாழ்ப்பாணம் இல10, கன்னாதிட்டி லேனை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரு சோமசுந்தரம் அவர்கள் 24-10-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரு, இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற வடிவேலு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவசேனா  அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிவர்மன்(போட்டோ ரவி), லயன், பாலகுமார்(JP, HNB  வடபிராந்திய காரியாலயம்), சரவணன்(பிரான்ஸ்), சுலோசனன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரியா, குணரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், வல்லிபுரம், நடராசா, நல்லையா, கந்தசாமி, நல்லம்மா மற்றும் கனகசுந்தரம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோரரும்,
காலஞ்சென்றவர்களான விவேகானந்தராஜா, அம்பிகைதாசன், மற்றும் புனிதவதி(கனடா), காலஞ்சென்ற குருதேவி, மற்றும் அம்பிகைபாலன்(துபாய்), நவரத்தினம், தங்கம்மா, தவமணி, ந.பரமேஸ்வரி, கதிர்காமு, காலஞ்சென்ற க.பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், மற்றும் நித்தியானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிருஷன், சௌமியா, அஸ்வினி, அபிஷேக், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2011 செவ்வாய்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று, கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல்  தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரிஇல10,
கன்னாதிட்டி லேன்,
யாழ்ப்பாணம்
.
தகவல்
குடும்பத்தினர்

சனி, 15 அக்டோபர், 2011

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Nayanthara breaks her love with prabhudevaநயன்தாரா மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்துவிட்டதாகவும், இதனால் திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின்னர் தனிமையில் இருந்த நயன்தாராவுக்கு, "வில்லு" படத்தில் நடித்தபோது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஆனால் இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தும் தங்களது கள்ளக்காதலில் உறுதியாக இருந்தனர் நயன்-பிரபுதேவா ஜோடி. தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத். இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபுதோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார். 

ஜனவரியிலிருந்து இலங்கை செல்லும் வெளிநாட்டவர் விசா பெற வேண்டும்!


2012 ஐனவரி 01 ஆம் திகதியிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு செல்லும் ஒவ்வொருவரும் புதிய  a new online Electronic Travel Authorization (ETA) system  ஊடாக முன்கூட்டியே விசாவிற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த போதிலும் இணையத்தின் ஊடாக விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ஒத்திவைத்திருந்தது. எனினும் இத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக சிறிலங்கா குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்கு மேலாக தங்கியிருக்கும் ஆட்களை கிரமமான முறையில் அரசாங்கம் கண்டுபிடிப்பதே இதன் நோக்கமாகும். வருகை தரவிருப்பவர்களில் உல்லாசப்பயணிகள் 50 அமெரிக்க டொலரும் வர்த்தகர்கள் 60 டொலரும் ஏனைய பயணிகள் 25 டொலரும் திரும்பப் பெறாத கட்டணமாக செலுத்த வேண்டும்.

யாழ். கரையோர கிராமங்களில் சிங்களவர்களுக்காக இறால் பண்ணைகள்!

யாழ்.குடாநாட்டின் கரையோரக் கிராமங்களை உள்ளடக்கி சிறிலங்கா அரசு ஆரம்பித்திருக்கும் இறால் பண்ணைகளில் தென்னிலங்கை மீனவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக வடபகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மண்டைதீவு காரைநகர் மற்றும் அராலி பகுதிகளை உள்ளடக்கி இந்த இறால் பண்ணைகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.கடற்கரைகளை உள்ளடக்கியே இவ்விறால் பண்ணைகள் உருவாக்கப்பட்டு வருகின்ற போதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அரச காணிகளென அதிகாரிகள் கூறிவருகின்றனர். அத்துடன் நிலத்தடி நீர் உவர் நீர் ஆகி வருவதை தடுக்கும் நடவடிக்கையாக உருவாக்கப்பட்டு வரும் மண் அணை தடுப்பே இறால் பண்ணைகள் அமையும் இடமெனவும் அவர்கள் மேலும் கூறிவருகின்றனர்.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

நம்பிக்கை வாக்கெடுப்பில் இத்தாலி பிரதமர் வெற்றி

இத்தாலியின் கோடீஸ்வர தொழிலதிபர் பெர்லுஸ்கோனி. கடந்த 18 ஆண்டுகளாக அந்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார். 2009ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய நிதி நெருக்கடியில் இத்தாலியும் சிக்கியது. கடன் சுமையை குறைக்க இத்தாலியில் சிக்கன நடவடிக்கைகள் உடனடி தேவை என ஐரோப்பிய மத்திய வங்கி எச்சரித் தது. அதற்கான பட்ஜெட்டை கடந்த வாரத்தில் அரசு தாக்கல் செய்தது. 

அதன் மீது நடந்த வாக்கெடுப்பில் நிதி அமைச்சரே குறிப்பிட்ட நேரத்துக்குள் வாக்களிக்காததால் அது செல்லாமல் போனது. பட்ஜெட் நிராகரிக்கப்பட்டது.

மனவளர்ச்சி குன்றிய குழந்தை பலி தூக்க மாத்திரை கலந்த ஜூஸ் குடித்து குடும்பமே தற்கொலை முயற்சி!

ஜூசில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டது. தற்கொலைக்கு முயன்ற தம்பதிகள் மற்றும் அவர்களின் 10 வயது மகன் மீட்கப்பட்டுள்ளான். மயிலாப்பூர் வி.பி. கோயில் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் (38). வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி லோகநாயகி (28). தம்பதிகளுக்கு சந்தோஷ் (10) என்ற மகனும் ஜனனி (3) என்ற மகளும் உள்ளனர். ஜனனிக்கு மன வளர்ச்சியில் குறை இருந்தது. மூன்று ஆண்டாக சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லை. 

இதனால், பெற்றோர் மன வேதனையில் இருந்தனர். குழந்தையின் நிலை குறித்து, தன் நண்பர்களிடம் கூறி கன்னியப்பன் அழுது புலம்பியுள்ளார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி மாலை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓட்டலில் திருச்சி முகவரியை கொடுத்து அறை எடுத்து கன்னியப்பன் குடும்பத்துடன் தங்கினார். இரண்டு நாட்களும் நன்றாக சாப்பிட்டு மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். 

ஆண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 3 பெண்கள் கைது சிம்பாவேயில் சம்பவம் !

சிம்பாவ்வேயில் ஆண்களுக்கு மயக்க மருந்தை வழங்கி அவர்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விந்தணுக்களை திருடிய குற்றச்சாட்டில் 3 பெண்களை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

கவேரு நகரில் வாகனமொன்றில் சென்ற வேளை இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் வாகனத்திலிருந்து உபயோகிப்பட்ட 33 கருத்தடை உறைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பெண்கள் ஹரேரே மாஷோலைன்ட் மற்றும் குவேறு ஆகிய நகர்களில் தெருவில் செல்லும் ஆண்களை தமது வாகனத்தில் ஏற்றி அனுமதித்த பின் அவர்களை மயக்க மருந்து கொடுத்து தமது காரியத்தை சாதித்து வந்துள்ளனர். 

6 பவுண் நகைக்காக கர்ப்பிணிப் பெண்ணைக் குத்தி கொலை செய்த இரக்கமற்ற பாவி!

கரூர் அருகே வீடு புகுந்து கர்ப்பிணியை குத்தி கொலை செய்துவிட்டு 6 பவுன் நகையுடன் ஆசாமி தப்பினார். ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி கவிதா(30).  கவிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று கவிதா மட்டும் வீட்டில் இருந்தார். மாமனார் குழந்தைசாமி அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு குழந்தைசாமியும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர்.

அமெரிக்காவில் சலூனில் புகுந்து சரமாரியாக சுட்டதில் 8 பேர் பரிதாப பலி

கலிபோர்னியா : அமெரிக்காவில் சலூனில் புகுந்த ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 8 பேர் பரிதாபமாக பலியாயினர். கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமானது சீல் பீச். இப்பகுதியில் உள்ள மெரிடேஜ் சலூன் கடை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது துப்பாக்கியுடன் ஒருவர் அங்கு வந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிவிட்டார். இதில் 8 பேர் குண்டு பாய்ந்து பலியாயினர். மேலும் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சம்பவ இடத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் ஆயுதங்களுடன் இருந்த நபரை பிடித்தனர். எந்த எதிர்ப்பும் இல்லாமல் சரணடைந்த அவரின் பெயர் ஸ்காட் எவன்ஸ் டெக்ராய் (42) என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஊருக்கு ஒரு உதாரணமாக விளங்கும்-திருகோணமலை நலம்புரிச்சங்கம்-கனடா




திருகோணமலை மாவட்டத்தில் போரினாலும் ஆழிப்பேரலையாலும் பெற்றார், உற்றார், உறவினர்களை இழந்த சிறார்களை வைத்துப் பராமரிப்பதற்கு ஒன்றரைக் கோடி செலவில் மல்லிகைத்தீவிலும் சாம்பல்தீவிலும் இரண்டு கட்டிடங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம். இந்தக் கட்டிடங்களில் 75 ஆதரவற்ற சிறார்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூபா 40 இலட்சம் (36,000 டொலர்) செலவில் கல்வி, உடை, உணவு, மருத்துவம் அளித்து வருகிறோம்" என கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத்தின் காப்பாளர் திரு சண்முகம் குகதாசன் சென்ற ஞாயிறு (ஒக்தோபர் 09) அன்று நியூ யஸ்மின் விருந்து மண்டபத்தில் நடைபெற்ற ஒன்று கூடலின் போது குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் "2011 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இடம்பெற்ற பெரு வெள்ளத்தால் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

தமிழ் சினிமா நடிகைகளுக்கு சினேகா ஓர் முன்னுதாரனம்!


உடல்தானம் செய்வேன்- சினேகாநடிகர் கமலஹாசன் ஏற்கனவே உடல் தானம் செய்து பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவரை தொடர்ந்து நடிகை சினேகாவும் உடல் தானம் செய்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
 
சமூகத்துக்கு ஒவ்வொரு வரும் நல்லது செய்ய வேண்டும். எனது பிறந்த நாள் விழாக்களை ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி கொண்டாடுகிறேன். இவ்வருட பிறந்த நாளை மாற்றுத் திறனாளிகளுக்கு விருந்து கொடுத்து கொண்டாடினேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
 இரு வருடங்களுக்கு முன் எனது கண்களை தானம் செய்தேன். விரைவில் உடல் தானம் செய்யவும் முடிவு செய்துள்ளேன். ரசிகர்கள் கண்களை தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 இவ்வாறு அவர் கூறினார்.
 சினேகா தற்போது முரட்டுக்காளை, விடியல் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ராமண்ணா என்ற படத்தில் நடிக்கிறார்.

இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொலை!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என அறியப்படுகிறது. இச்சம்பவம் நேற்றிரவு (13.10.2011) உடவலவ, பணஹடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரொக்டர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் தாய், தந்தை, மகன், மகள் ஆகியோரே சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு 7.30 மணியளவில் இவர்களின் வீட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களே இவர்களைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என அறியப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் தான் முல்லேரியாவில் அதிர்ச்சியூட்டும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அது அடங்குமுன்னரே இப்படி மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு இலங்கையின் சட்டம் ஒழுங்கை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும்-ஆய்வில் தகவல்

Smokingபுகை மனிதனுக்குப் பகை என்பது அனைவருக்கும் தெரியும், புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மன அழுத்தம் அதிகம் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் புகை பிடிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களின் அறிவுத்திறன், சராசரி ஆண்களை விட எட்டு புள்ளிகள் வரை குறைவாக இருக்கின்றது. தினமும் அவர்கள் புகைக்கும் சிகரெட்டின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறிவாற்றல் குறைவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.